பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 7 அழகுக் காவியமாக விளங்கும் இந்த அமைப்பைத் திட்டமிட்டுச் செயல்படுத்த முனைந்தவர் விஜய ரகுநாத சேதுபதியாவர். ஆனால், முப்பது ஆண்டுகள் தொடர்ந்த இந்த கட்டுமானப்பணி முத்துராம லிங்க சேதுபதியின் ஆட்சிக் காலமாகிய 1769இல் நிறைவு பெற்றது. இத்தலம் இந்துக்களுக்கு மட்டுமல்லாது இஸ்லாமியர்களுக்கும் கூட புனிதத் தலமாக விளங்குகிறது. மனித இனத்தின் ஆதிபிதாவாக இஸ்லாமியர்களால் கருதப்படும் ஆதம் நபியின் மக்களான ஆபில், காபில் ஆகிய இருவரது அடக்க இடங்களும் இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளன. - - * - - F தடிலலிப் பேரரசன் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர், சுந்தரபாண்டியனது விருப்பத்தின் பேரில் பாண்டிய நாட்டில் படையெடுத்து, இறுதிக் கட்டமாக இராமேஸ்வரத்திற்கு 1311இல் வந்தார். இத்தலத்தை வழிபட இன்று இந்தியாவின் பல பகுதிகளினின்றும் பயணிகள் வருகின்றனர். ஆனல் டசாலைவசதி இல்லாத அந்நாளிலேயே விஜயநகரப் பேரரசர்களான கிருஷ்ணதேவராயர், கி. பி. 1519 அலும் அடுத்து அச்சுதராயரும் இங்கு தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து பல்வேறு அறது. செயல்களை மேற்கொண்டனர். இவ்வரசர்களுக்கும் முன்னதாக விஜயநகர மகா மண்டலேசுவரர்கள் இராமேஸ்வரம் திருக்கோயி அக்கு வருகை தந்துள்ளனர். ■