பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 == - காலத்தின் அழிவுக்கரங்களுக்கு ஆற்ருது சீர்குலைந்து விட்டன. இப்பட்டினங்களின் அங்கமாக கலங்கரை விளக்கங்கள் நிர்மாணிக்கப்பட்டதற்கான செய்திகள் இல்லை. ஆனல் ஆங்கிலேயர் ஆற்காட்டு நவாபிடமிருந்து இந்தப் பகுதியை 1792 இல் தானம் பெற்றபிறகு, தொண்டியிலும் பாம்பனிலும் கலங்கரை விளக்கங்களைக் கட்டுவித்தனர். அந்நாளில் இவை டச்சு, ஆங்கில் வர்த்தகர்களின் முக்கிய வர்த்தகத் தொடர்பு நிலையங் களாகக் கருதப்பட்டு வந்தன. எனினும் தவிர்க்க இயலாத காரணங்களினல் தொண்டியில் இயங்கிய கலங்கரை விளக்கம் தொடர்ந்து செயல்படவில்லை அதேவேளை பாம்பனில் உள்ளது இன்றளவும் செம்ம்ை யாகச் செயல்பட்டுவருகிறது. பாம்பன் தீவின் வடமேற்கு மூலையில் சிதைந்து, போன சேதுபதிகளது கோட்டைக்கு அண்மையில் இந்தக் கலங்கரை விளக்கம் 1846இல் அமைக்கப் பட்டது. கடல் மட்டத்திற்கு மேல் தொன்னுாற்று நான்கு அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள இம் மண்டபம், ஆகாயத்தில் அறுபத்து ஏழு அடி உயரத்தில் நிமிர்ந்து நின்று கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. அதன் உச்சியிலுள்ள ஒளிவிளக்கு நான்கு திசைகளிலும் ஒராயிரம் சு ட ர் (வத்தி) பிரகாசத்தை அள்ளித் தெளிக்கும் ஆற்றல் வாய்ந்தது. பதினைந்து மைல் தொலைவிற்குள் நடமாடும் மரக் கலங்கள் இதன் ஒளிவீச்சின் உதவியினல் தங்களது பயணத்திசையையும், இலக்கையும் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். r