பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25

ரூபாய் ஐந்து கோடி அளவுக்கு துணி உற்பத்தியாவதும் கலியாக மட்டுமே இரண்டுகோடி செலவிடப்படுவதும் பாமக்குடியில் இத்தொழில் வளர்ச்சியின் மேன்மை யைக் காட்டுவதாக உள்ளது. O இராஜசிங்க மங்கலம் = கிழ் க்கு இராமநாதபுரம் பகுதியில் வளமிக்க நஞ்சையும் புேஞ்சையும் நிறைந்த ஊர். பத்தாம் நூற்ருண்டு துவக்கத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மூன்ருவது ராஜசிம்ம பாண்டியனது பெயரால் இந்த மங்கலம்' பெயர் பெற்று இருத்தல்வேண்டும். அந்த மன்னன் அமைத்த பெருங்குளத்தின் கீழ்ப்பகுதியில் இந்த ஊர் உருவானதை அவனது மெய்க்கீர்த்தியொன்று 'உலப்பிலோத வொலிகடல்போல் ஒருவரு முன்னந்தானமைத்த இராச சிங்கபெருங்குளக் கீழ்ச்சூழுநகரில்' என்று தெரிவிக்கிறது. மற்றுமொரு கல்வெட்டு இவ்வூர் பாண்டியரது வரகுண வளநாட்டில் உள்ள பிரமதேயம் எனக் குறிப்பிடுகின்றது. வறட்சியும் பற்ருக்குறையும் மக்களை வாட்டாமல் இருப்பதற் காகவே இராஜசிம்மன் இந்தப் பெருங்குளத்தை உருவாக்கி இருத்தல் வேண்டும். அவனது முற்போக்