பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழன் வரலாற்றை நினைவூட்டுகிறது. சுதந்தரப் போராட்டம் 1857 இல் தொடங்கியது என்றே வர லாற்றுநூல்கள் கூறிவந்துள்ளன. ஆல்ை இந்த நூலா சிரியர் இராமநாதபுரம்மாவட்டத்தில் 1801 இலேயே சுதந்தரக் கிளர்ச்சி நடந்த செய்திகளைக் கூறுவது பூரிப்பைத் தருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் மனிதகுல ஒருமைப் பாட்டுணர்வைப் பேணி வந்த மையைச் செப்பேடுகள் செப்புகின்றன. ஆலுைம் சாதிப் பூசல்கள் 1376-இலேயே இருந்துள்ளன என்றுள்ள செய்தியையும் கல்வெட்டு கூறுகிறது. நூல், சிறப்பாக அமைந்துள்ளது. வரலாற்றுக் குறிப் புகளைத் தேடித் தொகுப்பதில் ஆசிரியர் மிகவும் உழைத்திருக்கிருர் அருமையான பணி. இந் தக் காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் பணி. நூலா சிரியர்கள் எஸ். எம். கமால், நா. முகமதுசெரீபு ஆகி யோரை உளமாரப் பாராட்டுகின்ருேம். நூலினை வாங்கிப் படிப்பதும் வரலாற்றுக்கு வாழ்வளிப்பதும் நமது கடமை. இன்ப அன்பு அடிகளார்