பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வகுதை, தென்காயல் என்பனவும் இந்த ஊருக்கான இலக்கியப் பெயர்களாகும். பதிருைவது நூற்ருண் 4-ம்கு முன்னதாக உள்ள நிகழ்ச்சிகளுடன் இணைக்கத் தக்க வரலாற்றுச் சான்று எதுவும் இங்கு இதுவரை கிடைக்கவில்லை. இராமநாதபுரம் திருமலைச்சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடு ஒன்றிலிருந்து, இந்தப் பட்டினத்துப் பேட் டையில் முத்து, நெல், நவதானியங்கள், பாக்கு, மிளகு, செ ம் Կ, துத்தநாகம், பட்டுப்புடவை, பன்னிர், ஏலம், கிராம்பு, சாதிக்காய், பத்திரி, பட்டு அால், கருப்புக்கட்டி, புளி, தேங்காய், பலசரக்கு ஆகிய பொருட்களில். சிறப்பான வாணிபம் நடை பெற்றமை தெரியவருகிறது. இதன் காரணமாக பல தாட்டாரும் இங்கு வந்து வதிந்து இருந்ததை இங்குள்ள பன்னட்டார் தெரு என்ற பகுதி நினைவூட்டு கிறது. இந்த வணிகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்ந்து நின்றவர்கள் சோனகர்கள் என்று அழைக்கப் பட்ட இஸ்லாமியர். கிழக்குக் கடற்கரையெங்கும் சிறு சிறு தொகுதிகளாக அஞ்சு வண்ணங்களில் ஆங்காங்கு குடியமர்ந்த அவர்கள், இந்த ஊரிலும் நிலைத்து ஏற்ற முடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். பதிருைம் நூற்றாண்டின் துவக்கத்தில் மன்னர் வளை குடாவில் போர்த்துக் கேகியரின் ஆதிக்கம் மிகுந்ததன் காரணமாக இங்குள்ள இஸ்லாமியரின் வெளிநாட்டு வாணிபம் சுருங்கியது என்ருலும் ஒரு நூற்றாண்டு காலவரம்பிற்குள்ளாக மீண்டும்தங்களது வளமையான வாணிபச் சிறப்பை எய்தியதன் சின்னம்ாக வள்ளல் சீதக்காதி விளங்கினர். அவரது வற்ருத செல்வமும் வளர்ந்து ஓங்கிய கொடையும் செத்தும் கொடுத்த