பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சேர்ந்தவராகக் குறிக்கப்பட்டுள்ளது. ஜம்பெருங் காப்பியங்களில் ஒன்ருன சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட அசிலும், துகிலும், ஆரமும்' பற்றி மதுரையில் பேசப் படுகிறது. இன்னும் ஏழாம் நூற்றாண்டு இலக்கியமான பாண்டிக் கோவையில் பாண்டியன் நெடுமாறனது பட்டினமாக தொண்டி புகழ்ந்து உரைக்கப்படுகிறது. இலக்கியச் செறிவு இணைந்த இந்தப் பட்டினம் சேரனுக்குச் சொந்தமான கடல் தொண்டி போல இந்தத் தெ ாண்டி சோழனது சொத்தாக இருந்து பாண்டியருக்கு மாறி இருக்கிறது. - தமது எட்டாவது ஆட்சியாண்டில் பாண்டிய நர்ட் டிற்குள் படை நடத்திவந்த ராஜராஜ சோழ தேவன்; கடந்தவுடன் தொண்டியை வந்தடைந்த பிறகுதான் தமது இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் மாறு தலைச் செய்தான். அவன் புதிதாக அமைத்த அந்தப் பாண்டிய நாட்டுப்பாதை பின்னர் ஜனநாதன் வழி என வழங்கப்பெற்றது. இலங்கைத் தண்ட நாயகன் ஜகத் விஜயன் தலைமையில் கி.பி.1168இல் இலங்கை யிலிருந்து வந்த படைகளுக்கும் பாண்டியன் குலசே கரனது படைகளுக்கும் இந்தப் பட்டினத்தில் பல போர்கள் நடைபெற்றன. பாண்டிய இளவரசன் வீரபாண்டியனுக்குப் பரிந்து வந்த இலங்கையரை. இந்தப் பட்டினத்திற்கு அண்மையில் குடியேறிய இஸ்லாமியர், பரிசுப் பொருட்களுடன் வரவேற்பு அளித்ததாக இலங்கை வரலாறு மகாவம்சம் பதிவு செய்துள்ளது. இன்னொரு கல்வெட்டுச் செய்தியின் படி, தொண்டிக்கு அண்மையில் தீர்த்தாண்டதானம் திருக்கோயில் கி.பி. 1269 இல் குழுமிய பல நாட்டு