பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I

  • T

வேண்டும். இதன் காரணமாக இந்த ஊரைப் பலவகை களிலும் சிறப்புறச் செய்து, தனது பட்ட மகிஷியான லோகமகாதேவியின் பெயரில் இந்தப் பட்டினத்தை ராஜராஜ தேவன் 'உலகமகா தேவிபட்டினம்' என்ற பெயரில் வழங்கினன் என்பது வரலாற்று ஊகமாக அமைகிறது. இந்தப் பெயரின் சுருக்கமான 'தேவி பட்டினம்’ என்பது இன்றைய வழக்காகும். செவ்விருக்கை நாட்டில் அமைந்த இந்தப் பட்டினம், ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பூரீவல்லப தேவன் பெயராலும் வழங்கப் பட்டதை அந்த ஊரில் உள்ள இன்னொரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. பன்னி ரண்டாம் நூற்ருண்டில் இலங்கையில் இருந்து வந்த இழப்படைகளுக்கும் குலசேகர பாண்டியனது தமிழ்ப் 鷺。 -- படைகளுக்கும் நடைபெற்ற போரில் இந்த ஊர் இருவர் கைமாறியது. இந்த ஊருக்கு அண்மையிலும் இந்தப்போர் தொடர்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மதுரை மன்னன் கிருஷ்ணப்ப நாயக்கனது பெரும்படை யொன்று கி பி. 1565இல் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று இலங்கையை வெற்றி வாகை சூடி திரும்பிய விவரம் மதுரைநாயக்கர் வரலாற்றில் காணப்படுகிறது. இத்தகைய வெற்றி விஜயம் ஒன்றை சேதுபதி மன்னரது பர்வத வர்த்தினி என்ற கப்பல் மேற்கொண்டதாக பிற்கால இலக்கியமான சேதுபதி ஏலப்பாட்டு என்ற சிற்றிலக்கியம் வர்ணிக்கிறது. பிற்காலப் பாண்டியப் பேரரசின் பிர தான அங்கமான குதிரைப் படைக்குத் தேவையான குதிரைகள் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் அரபு நாடுகளில் இருந்து பெறப்பட்டன. அவை இறக்கப்பட்ட பாண்டிய நாட்டின் மூன்று துறைகளில் . இந்தப் பட்டினமு