பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஒன்ருகும் என உலகப் பயணி வஸ்ஸாப் எழுதியுள்ளார் இதன் காரணமாக இந்தப் பட்டினத்தின் தென்பகுதி யில் அரபுநாட்டு இஸ்லாமியரின் அஞ்சு வண்ணமும் குடியேற்றமும் ஏற்பட்டன. ஏற்கனவேபாண்டிய நாட் டிற்கும் அரபுநாடுகளுக்குமான வணிகத் தொடர்புகள் வலுப் பெற்றன. இங்குள்ள சையது அகம்மது பாக்தாதி என்பவரது அடக்கவிடம் இதனை உறுதி செய்கிறது. (ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திலிருந்து வந்தவர் களைக் குறிக்கும் சொல் பாக்தாதி என்பதாகும்). மன்னர்குடாவில் போர்த்துக்கேயரின் கடலாதிக்கம் மிகுந்த இந்தப் பட்டினத்து மரக்கலராயர்களான் இஸ்லாமியரது வெளிநாட்டு வணிபத் தொடர்புகள் சுருங்கின. மற்றும் இந்தத் துறைமுகம் கடல் கோளாறினல் பாதிக்கப்பட்டு பெருங்கப்பல்களைக் கரைக்கு அண்மையில் கொண்டு வருவது இயலாது போயிற்று. இந்த நூற்ருண்டின் துவக்கம் வரை எதிர்க்கரையில் உள்ள ஈழத்துடன் மட்டும் கப்பல் தொடர்பு நீடித்தது. இப்பொழுது இந்த ஊர் இந்து சமயத்தினரது யாத்திரைத் தலமாக மட்டும் இருந்து வருகிறது. பெரியபட்டினம் சின்னஞ்சிறு ஊராக உள்ள இன்றைய பட்டினத்தின் பெயரும் நிலையும் கடந்த பல நூற்ருண்டுகளில் வேறுவிதமாக இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முட்டாச் சிறப்புடைய பட்டினம் Q/Т ӨТЕТТ மூதறிஞர்களால் பாராட்டப் பெற்ற அந்தப் பெருநகரம் கற்பனையிலுங் காண முடியாத எளிமைக்