பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கோலத்தில் இன்று காட்சியளிக்கிறது. பராக்கிரம பட்டினம் எனவும், பவித்திரமாணிக்கப் பட்டினம் எனவும் வரலாற்றில் பதின்மூன்ரும் நூற்ருண்டுவரை இந்த ஊர் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த நுாற் ருண்டில் பாண்டிய நாட்டிற்கு வருகைதந்த வரலாற்று ஆசிரியர் வஸ்லாப் இந்த ஊரினைப் பத்தன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாறவர்மன் குலசேகர பாண்டியனது மூன்று பெரும் துறைமுகங்களில் இந்தப் பட்டினமும் ஒன்று எனவும் குறித்துள்ளார். கி. பி. 1318இல் டெல்லியிலிருந்து தென்னகம் நோக்கி வந்த தளபதி குஸ்ருகான் இந்தப் பட்டினத்தைச் சூறையாடியதாகவும், அங்கு சிறப்புடன் விளங்கிய சுல்தான்' விராஜுதீன் என்ற அரபு வணிகரையும் அவரது குடும்பத்தினர் உடமைகளையும் கொள்ளை கொண்டு கொலை செய்ததாக கவிஞர் இஷாமி தமது கவிதை நூலில் குறித்துள்ளார். இலங்கையிலிருந்து மாலித்தீவு நாட்டிற்குப் புறப்பட்ட உலகப் பயணி இபுன் பதுாதா கி. பி. 1334இல் மரக்கலங்கள் அழிவுக் குள்ளாகிதிசைமாறி வந்துஇந்த பத்தனில் பலநாட்கள் தங்கி இருந்தார். இந்தத் துறைமுகத்தின் சிறப்பை யும் வளமையையும் தமது குறிப்புகளில் விவரமாகக் குறித்துள்ளார். பத்தன் என்பது அரபு மொழியில் பட்டினம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு நேரான பொருளைக் கொடுப்ப தாகும். இந்தப் பட்டினத்தை வரலாற்று ஆசிரியர் கள் அமீர்குஸ்ருவும், திமிஷ்கியும் கூட பத்தன் என்ற அரபுச் சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். ஆனல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது எட்டாம் ஆட்சி யாண்டு கல்வெட்டில் இந்த ஊர் பவித்திர மாணிக் கப்பட்டினம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.