பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


75

ன் பிடித்தல், சிப்பி, பவளம் சேகரித்தல் போன்ற தொழில்களிலும் திறம்படத் திகழ்ந்தனர். என்ருலும் இவள்ளைப் பரங்கிகளான போர்த்துக்கீசிய, டச்சு, ஆங்கில நாட்டவரின் கடுமையான போட்டி, மோதல் ஆகியவைகள் காரணமாக இவர்கள் தங்களது இயல் பான கடல் தொழிலே விட்டு, விவசாயத்தில் ஈடு பட்டனர் என்ருலும், முத்துக் குளித்தலிலும், சங்கு எடுத்தலிலும் சிறந்த தொழிலாளிகள் தொகுதியாக இந்த ஊரில் இந்றளவும் வாழ்ந்து வருகிரு.ர்கள். தெற்கு கடலேயும் இந்த ஊரையும் இணைக்கும் கப்பலாறு என்ற இயற்கையான ஆற்றுவழி மணல் மேடிட்டு விட்டதால் இந்த ஊர் துறைமுகப்பட்டின மாகத் தொடர்ந்து விளங்கும் தகுதியை இழந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு க ட ல் தொழில் வாய்ப்பும் அருகி விட்டது. 盡。

ஆனல் இந்த ஊரின் பழமையான வரலாற்றுப் பாரம்பரியத்தை விளக்கும் சின்னங்களாக இ ங் கு அகழ்வில் கிடைத்த சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க சேதுபதி மன்னர்களது பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும், ஹிப்ரு, அரபி, தமிழ் கல் வெட்டுக்களும் அமைந்துள்ளன. மற்றும் இங்குள்ள சிதைவுற்ற கோட்டைச்சுவர், கடற்கரைப் பகுதி, கட்டுமானங்களும் கடந்த காலச் சிறப்பைக் கட்டியங் கூறும் சின்னங்களாக விளங்குகின்றன. O