பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 38 இராமன் - பன்முக நோக்கில் வைத்துக்கொண்டுதான் இராமனைப் பட்டம் ஏற்கச் சொல்கிறான் தசரதன். இச் சூழ்ச்சியைத் தசரதன் செய்தாலும் வசிட்டன் ஏன் வாய்மூடி இருக்கின்றான் என்பது இராமனுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இரண்டு பெரியவர்களும் இராஜ சுல்க்கத்தை மறந்து அல்லது மறைத்து, இப்பொழுது இராமனுக்குப் பட்டம் குட்ட முன்வருகிறார்கள் என்றால், அது சிந்திக்க வேண்டிய விஷயம். அரசன் ஆணை இட்டால் ஏன் என்று கேட்காமல் கீழ்ப்படிவதுதான் நீதி, மற்றவன் குலகுருவாகிய வசிட்டன். இராஜசுல்கத்தை அறிந்த அவனே சும்மா இருக்கிறான் என்றால் இதில் ஏதோ இருக்கிறது என்று இராமன் நினைந்ததில் வியப்பில்லை. தன் சூழ்ச்சியைப் பிறர் அறியாமல் இருக்கத்தான் இராமனிடம் இவ்வளவு பெரிய முகவுரை பேசினான் தசரதன். கைகேயி வயிற்றில் பிறந்த பிள்ளைக்கு அரசைத் தருவதாகக் கேகேய மன்னனுக்குக் கொடுத்த வாக்கு எங்கே? தசரதனால் மறக்கப்பட்டது. அதை இராமன் அறிவான் ஆதலால், கடன் இது என்று உணர்ந்தும் அரசன் எடுத்த முடிவில் தான் தலையிடுவது சரியன்று என்ற நினைவாலும், உந்தப்பெற்ற இராமன் வாய்மூடி இருந்தான். . அவன் மெளனத்தின் மூலமே அவன் மன ஓட்டங்களைத் தசரதன் அறிந்தான் ஆதலால், குருசில் சிந்தையை மனக் கொண்ட கொற்றவனாகிய தசரதன், தருதி இவ்வரம் என்று சொல்லி, அவனைப் பேசவிடாமல் அனைத்துக் கொண்டான். - வசிட்டன் நிலை இராஜசுல்க நிகழ்ச்சியை மறந்துவிட்டு, இராமனுக்குப் பட்டம் கட்ட முடிவுசெய்ததை வசிட்டன் எவ்வாறு ஏற்றுக் கொண்டான் என்ற வினா தோன்றுமல்லவா? அதற்கும் ஒரு விடையை யோகவாசிஷ்ட இராமாயணம் கூறியுள்ளது என்று ஒர் அன்பர் கூறக் கேள்வியுற்றேன். அதன்படி தசரதன்