84 38 இராமன் - பன்முக நோக்கில் பேரனுக்குரியது என்பது தவிர்க்க முடியாத சட்டம். மேலும், தசரதன் கேகேயனுக்கு வாக்குக் கொடுத்த காலத்தில் கோசலைக்குப் பிள்ளை இல்லையாதலால் அப்பொழுது நியாயமாக இருந்தது. நிலைமை மாறிவிட்டபொழுது கோசலம் தனக்கு வரவேண்டியது என்பதை இராமன் அறிந்துளான். கம்பன் சாதுரியம் வான்மீகமும் யோகவாசிஷ்டமும் இராஜசுல்க்கம் முதலானவற்றை விரிவாகப் பாடுவதால் தசரதன் தன் மதிப்பிலிருந்து நழுவி விடுகிறான். இந்த இக்கட்டான நிலையைப் போக்க விரும்பிய கம்பநாடன், இறைவனையே மகனாகப்பெற்ற தசரதன் மதிப்பிழக்கக்கூடாது என்ற முடிவான கொள்கையுடன் இருந்தான். ஆதலின் மிகச் சாதுரியமான முறையில் இராமனிடம் தசரதன் பேசுமாறு காப்பியத்தை அமைக்கிறான். எந்த நிலையிலும் அவப் பெயர் வராமல் "வாய்மையும், மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்" (4018 என்று வாலியே புகழுமாறு, தசரதன் என்ற பாத்திரத்தை அமைத்துவிட்டான். இராமன் காட்டிற்குப் புறப்படும்பொழுது தசரதனும் கைகேயியும் அதனைப் மேற்பார்வை பார்த்ததாக மூலநூல் சொல்லிச் செல்கிறது. அந்த இக்கட்டான நிலையையும் சமாளித்து விடுகிறான் கம்பன். அவன் அவசமுற்று கிடக்கின்ற நிலையில் தான் கைகேயி - இராகவன் உரையாடல் நடைபெறுகின்றது. "இன்றே போகின்றேன், விடையுங் கொண்டேன்" (1604) என்று கூறிவிட்டு, தசரதன் மூர்ச்சை தெளியுமுன் இராமன் கானகம் சென்றதாகக் கம்பன் பாடுகிறான். மந்திராலோசனை சபையில் தந்தை-மகன் உரையாடல், மகனைத் தழுவிக் கொள்ளுதல் என்ற இரு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தந்தையும் மகனும் சந்திக்கவே இல்லை. கைகேயியை வெறுத்து அவள் மனைவி அல்லள். பரதன் மகனல்லன் என்று கூறிவிட்டு தசரதன் உயிர் துறந்தான். ஆதலின் வீடு பேற்றை அடைய முடியாமல் சொர்க்கத்திலேயே இருக்கிறான்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/102
Appearance