பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் இராமனும்ே 85 தசரதன். தமிழ்நாட்டு மரபின்படி, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வீடுபேற்றை அடைய முடியாது. அதனாலேயே இலங்கைப் போர் முடிந்து அயோத்தி திரும்பு முன் சொர்க்கத்திலிருந்து தசரதன் மீண்டு வந்து தனயனைச் சந்திப்பதாக ஒரு நிகழ்ச்சியைப் புகுத்துகிறான், கம்பன். இறந்த பிறகுங்கூட அவன் மனத்தில் இருந்த காழ்ப்புணர்ச்சி போகவில்லை என்பதைப் பின்வரும் பாடலில் கவிஞன் விளக்குகிறான். "அன்று கேகயன் மகள் கொண்டவரம் எனும் அயில்வேல் இன்று காறும் என் இதயத்தினிடை நின்றது என்னைக் கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன்குலப்பூண் மன்றல் ஆகம் ஆம் காந்த மாமணி இன்று வாங்க" - கம்ப. 10008 இதன் பொருள்: "அன்றொரு நாள் கேகேயன் மகளாகிய கைகேயி கொண்ட வரம் என்ற கூர்மையான வேலாயுதம் என் இதயத்தில் புகுந்தது. புகுந்த அந்த வேல் நீங்காமல் என் இதயத்திலேயே ஊடுருவி நின்றது. இன்று உன்னைத் தழுவிய போது உன் மார்பு என்ற காந்தக் கல் என் மார்பில் தைத்து அங்கேயே தங்கியிருந்த இரும்பிலான வேலாயுதத்தைப் பிடுங்கி விட்டது” என்பதாகும். இராமன் கேட்ட வரம் இறந்த பிறகும் கைகேயி பற்றிய தவறான எண்ணம் தந்தையின் மனத்தில் இருப்பதை அறிகின்றான், இராமன். ஆழ்ந்து சிந்தித்தால் கைகேயி தவறு ஒன்றும் இழைக்கவில்லை. இராஜகல்கத்தை எடுத்துக்காட்டி பரதனுக்கு இராச்சியத்தைக் கேட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தசரதன் பொய்ம்மை வெளிப்பட்டிருக்கும். அவனுக்கு அவப்பெயர் சூழும். அதுவராமல் தடுப்பதற்காகவே கற்புடை மகளாகிய கைகேயி, வரம் என்ற பெயரில் அரசைப் பெற்றாள். அவதார நோக்கம் நிறைவேறுவதற்காகத் தேவர்கள் அவளைக் கருவி