பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 38 இராமன் - பன்முக நோக்கில் இவ்வாறு துயர்உறும் இராமனை நாம் நம்மில் ஒருவனாக நினைத்து அவனுடைய துயரத்தில் பங்கு கொள்கிறோம். அந்த நெருக்க உணர்வு வளர வளரப் பின்னர் நம் அறிவு வளர்ந்த நிலையில் அவன் பரம்பொருள் என்பதை உணர முடிகிறது. மனிதகுலத்துக்கு வழிகாட்டுபவன் அவன் என்ற நினைவு வந்தவுடன் அவனைப் பின்பற்றி நடக்கவும், பக்தி செலுத்தவும் நாம் பழகிக் கொள்கிறோம். முடிவாக தந்தை தனயனிடத்தும், தனயன் தந்தையிடத்தும் கொண்ட பாசத்தைத் தரசதன், இராமன் ஆகியோரின் எண்ணம், சொல், செயல் இவற்றால் கவிச்சக்கரவர்த்தி விளக்கியதைக் கண்டோம். பாச நாடகத்தினிடையிடையே இராமாயண நிகழ்ச்சியமைப்புகளைச் சித்தரித்த கவிச் சக்கரவர்த்தியின் திறனும் காணமுடிந்தது.