பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 38 இராமன் - பன்முக நோக்கில் கவிஞனுக்கு இந்த நான்கு குழந்தைகளின் விளையாடல்களைப் பாட ஏனோ மனம் வரவில்லை! ஒரு நூறு அல்லது 200 பாடல்களாவது கைகேயி வளர்த்த செல்வன் இராமன் விளையாடல்களைப் பாடியிருக்கலாம். அவ்வாறு இல்லாமைக்குக் காரணம் யாதென்று தெரியவில்லை. குழந்தைகள் என்று நினைத்தாலே ஒர் ஒவ்வாமை கம்பனிடம் இருந்தது என்று நினைக்கத் தோன்றுகிறது. செவிவழிக் கதை உண்மையானால், இக்கவிஞன் தன் ஒரே மகனை இளவயதில் இழந்திருக்க வேண்டும். அதனால் குழந்தைகள் என்ற நினைவு தோன்றும்போதே ஒவ்வாமை தோன்றி விட்டது போலும். இராமனின் விளையாட்டுப் பருவத்தைப் பற்றிப் பத்துப் பாட்டுகளில் கூடப் பாடவில்லை. எனவே, கைகேயி வளர்த்த பொழுது இராமன் என்ன செய்தான் என்று நாம் அறிய, வாய்ப்பில்லை. பிறந்த குழந்தையின் பிரிவினால் விளையும் அவலத்தைத் தசரதன், இராவணன், மண்டோதரி ஆகியோர் வாயிலாக மிக விரிவாகப் பாடிய கவிச் சக்கரவர்த்தி மழலைப் பருவ விளையாடல்களைப் பாடாதது ஒரு பெருங்குறையே என்பதில் ஐயமில்லை. இராமன், பெற்ற தாயாகிய கோசலையைக் கண்டு வணங்கும் பகுதி எதிர்கொள் படலத்தில் தான் வருகிறது. திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டதைத் தசரதனுக்கு சனகன் தெரிவிக்க, தசரதன் தம் மனைவியரோடு மிதிலைக்கு வரும் வழியில் மிதிலையின் எல்லையில் தாயர் மூவரையும் கண்டு இராமன் வணங்கினான் (1053) என்ற செய்தி பேசப்படுகிறது. அடுத்து இராமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தசரதன் முடிவு செய்தான் என்பதைக் கேள்விப்பட்ட கோசலை சுமித்திரையோடு கோயிலுக்குச் சென்றாள் என்று கவிஞன் பாடுகிறான்.