பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும்ே 97. சந்தனமும் பாம்பும்: இனி, கைகேயியினிடம் விடையும் கொண்டேன் என்று கூறி அவளை வணங்கிவிட்டுப் புறப்பட்ட தசரதகுமாரன் தன்னைப் பெற்ற தாயாராகிய கோசலை அரண்மனைக்கு நேராக வந்து சேர்ந்தான். இராமனின் தாயாக இருப்பினும் தசரதன் அவளுக்கென்று தனியே செய்தி சொல்லி அனுப்பவில்லை. நகர மாந்தர் கேள்விப்பட்டது போலவே கோசலையும் இராமன் முடிசூடலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். ஆதலின், இப்பொழுது அபிஷேகம் முதலியவற்றைச் செய்துகொண்டு, முடிசூடிய நிலையில் வெண்கொற்றக் குடையின்கீழ் அண்மையில் உள்ளவர்கள் சாமரம் வீச மகன் வரப்போகிறான் என்று அத்தாய் அளவற்ற கற்பனைகளோடு தன் கோயிலில் காத்திருந்தாள். ஆனால், அவள் என்னென்ன நினைத்தாளோ அவை ஒன்றும் அதாவது கவரி, குடை, மெளலி ஆகிய ஒன்றும் இல்லாமல் புடைசூழ்ந்து யாரும் வராமல், மகன் தனியே வருவது கண்டு திடுக்குற்றாள். அவள் எதிர்பார்த்தவை ஒன்றும் வரவில்லையே தவிர, அவள் எதிர்பாராதவை இரண்டு இராமனுடன் வந்தன என்கிறான் கவிஞன். அந்த இரண்டும் அவள் கண்ணுக்குப் படவில்லை. அரசகுமாரன் வரும்பொழுது முன்னும் பின்னும் பணியாளர் வருவது இயற்கை. ஆனால், இப்பொழுது பணியாளர்க்குப் பதில் கண்ணுக்குத் தெரியாத இருவர் வருகின்றனராம். நடந்துவரும் இராமனுக்கு முன்னே விதி என்ற ஒன்று அவனுடைய எதிர்காலத்தை வனைந்து கொண்டே வருகிறது. இராமனுக்குப் பின்னே தருமதேவதை தளர்துத வீழ்ந்த தன் கதியை எண்ணிக் கண்ணிருடன் வருகிறது. ஆம்! முன்னே செல்லும் விதியையும், பின்னே வரும் தரும தேவதையையும் இராமனோ, கோசலையோ பிற மக்கள் கூட்டமோ காண முடியவில்லை என்ற கருத்தை வலியுறுத்த வந்த கவிஞன், ஒருதமியன் சென்றான்' என்று கூறுகிறான். அப்பாடல் வருமாறு: அ-7