பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும் ே 105 பண்பையும் உயர்த்துவதாக இல்லை. அதே போலக் கோசலையிடம் பேசும்பொழுது பரதன் நாட்டைப் பெற்றுவிட்டால் தசரதன் பாடு பரிதாபமாகிவிடும் என்று இராமன் பேசுவதாக உள்ள மூலநூல் கருத்து கம்பன் படைத்த இராமனுக்குப் பொருந்துவதாக இல்லை. மிகக் குறிப்பாக, என்னை நீங்கி இடர்உறும் மன்னன் என்று சொல்வது, நடந்தவற்றை யாரும் சொல்லாவிடினும் இராமன் தன் நுண்ணறிவால் அறிந்து விட்டான் என்பதை வலியுறுத்தும். கம்பன் வகுத்த முறையில் இராமன் தசரதனைக் காணவே இல்லை. 'இயம்பினான்நுந்தை' என்று கைகேயிதான் கூறினாளே தவிர, தசரதன் அந்த இடத்தில் இல்லவே இல்லை. அப்படியிருக்க, ‘என்னை நீங்கி இடர்கடல் வைகுறும் என்ற இராமன் கூறக் காரணமென்ன? தசரதன் தன்பால் வைத்திருந்த அன்பு ஒரு தந்தை மகன்பால் நியாயமாகச் செலுத்த வேண்டிய இயல்பான அன்பைவிடப் பன்மடங்கு அதிகமானது என்பதை இராமன் நன்கு அறிவான். அப்படியிருந்தும் கைகேயியின் அரண்மனையில் தந்தையைக் காணமுடியவில்லை. (1597) காண முடியாமற் செய்தது சிற்றன்னையின் பணி என்று இராமன் அறிந்து கொண்டான். எனவே, தான் காடு சென்றால் தந்தை கடும் துயர் எய்துவான் என்பதை உய்த்துணர்ந்து கொண்ட இராமன் அந்த நேரத்தில் கோசலையின் துணை அவனுக்கு வேண்டியிருக்கும் என்பதையும் அறிந்த கொண்டான். ஆதலால், "துயர்க் கடலில் மூழ்கும் தந்தைக்கு வேறு யாரும் துணை இல்லாத பொழுது நீங்கதான் துணையாக இருக்க வேண்டு"மென்று தாயிடம் வேண்டிக் கொள்கிறான். முழு அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில்கூட மகனை அவன் சந்திக்க (Lp lý- ll I IT ĝ5 Li iq- செய்கின்றவர்கள் (சிற்றன்னை) அரண்மனையிலேயே இருக்கிறார்கள். அப்படி இருக்க, நாளை முடிபுனையப் போகும் பரதன் கைக்கு அதிகாரம் போய்விட்டால் தந்தையின் கதி என்னாகும் என்று சாதாரண