பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is0 38 இராமன் - பன்முக நோக்கில் ஒருகணம்கூட நினைத்து விடாதே. பணியாளரைப் போல ஏவல் செய்வாயாக. பதினான்கு ஆண்டுகள் முடிந்து அப்பெருமகன் அயோத்தி வந்தால் நீயும் வருவாயாக; ஒருவேளை வேறு ஏதாவது நிகழ்வதாயிருந்தால் அதற்கு முன்னர் நீ உன்னை முடித்துக் கொள்வாயாக" (1752) என்பதே அவள் இரண்டாவது ஆணை. இப்பாடலின் சிறப்பைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். இப்பெருமாட்டி இராமனைப் பெற்ற தாயும் இல்லை; வளர்த்த தாயும் இல்லை; இருந்தும் தான் பெற்ற பிள்ளையை மாற்றாள் மகனாகிய இராமனுக்கு அடியானாகத் தந்துவிடுகிறான். அடியானாகப் பணிபுரிபவன் தன் எசமானனுக்கு ஒன்று நிகழ்ந்துவிட்டால், தானும் முடியவேண்டும் என்ற கடப்பாடு எங்கும் இல்லை. எனவே, அத்தாய் அடியாரின் ஏவல் செய்தி என்று கூறிய பிறகு, 'உலகில் உள்ள மற்றப் பணியாளர்களைப் போல நீ இருக்கக் கூடாது. உன் தலைவனுக்கு ஒன்று நிகழ்வதா யிருப்பின், முன்னம் முடிதி என்று கூறினாள் என்றால், இத் தாய் இராமனைப் பெற்ற தாயினும், வளர்த்த தாயினும் பன்னூறு மடங்கு உயர்ந்தவள் ஆகிவிடுவதைக் காணமுடிகிறது. இந்த எண்ணத்தை மனத்தில் கொண்டுதான் கவிச்சக்கரவர்த்தி, இராமன் இவள் மாளிகை அடைந்தான் என்று கூறவரும்பொழுது, 'சுமித்திரை கோயில் புக்கான்' என்று பேசுகிறான். தன்னலம் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் பிறர் வாடாது கருணை செய்வது தெய்வம் ஒன்றுதான். அந்தத் தெய்வம் உறையும் இடத்தைக் கோயில் என்று சொல்வது தமிழ் மரபு அரசன் அரசியர் வாழும் இடத்தை ஒரோவழி கோயில் என்று சொல்வதும் தமிழ் மரபு. ஆனால், இங்கே சுமித்திரை கோயில் என்று சொல்லும்பொழுது அரச மரபு பற்றி அவள் வாழும் இடத்தைக் கோயில் என்று சொல்லவில்லை. அவள் தெய்வத் தன்மை வாய்ந்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவே 'சுமித்திரை கோயில்’ என்கிறான் கவிஞன்.