பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

廿8 38 இராமன் - பன்முக நோக்கில் பிறந்து, அரசரில் வளர்ந்து, பேரரசியான அவளுக்கு இந்த நுணுக்கம் பழைய பாடமாகும். அரசர்கள் நேரிடையாகத் தம் வாயைத் திறந்து எந்த ஆணையையும் இடுவதில்லை. அதை நினைவூட்டுவதுபோல நாயகன் வாயால் உரையான் என்று தொடங்கினாள். மறுப்புத் தெரிவிக்கும் மனநிலையில் இராமன் இல்லை என்பதை அவன் அவளைப் பணிந்து, வாய்பொத்தி நிற்கும் நிலை அவளுடைய மனத்தில் தென்பைத் தந்தது. எனவேதான், அடுத்து மைந்த! உனக்கு உந்தை உரைப்பது ஒர் உரை உண்டு என்று கூறினாள். அரசியல் நுணுக்கம் தெரிந்த இராமனுக்கு இது நன்கு விளங்கியிருக்கும். ஆகவே, 'உந்தை' என்று அவனுடைய மனம் குளிருமாறு கூறிவிட்டு, உரைப்பது ஒன்று உண்டு என்று கூறிமுடித்தாள். இந்த வினாடி வரை அந்த உரை என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இராமனிடம் ஒரு சிறிதும் இல்லை என்பதை நன்கு உறுதிப்படுத்திக்கொண்ட கைகேயி, இறுதி பாணத்தைத் தொடுக்கின்றாள். பரதனுக்கு முடியுரிமை வாங்கியதை ஒரே வரியில் முடித்து விட்டு, இரண்டு மூன்றாம் அடிகளில் இராமன் காடு செல்ல வேண்டியதையும், பதினான்கு ஆண்டுகள் கழித்துத்தான் திரும்ப வேண்டும் என்பதையும் நான் கூறுகிறேன்' என்று சொல்லாமல், ஆணை இட்டான் அரசன் என்றும் சொல்லாமல், இயம்பினன் அரசன்' என்றாள். சில தொடர்கள் எழுப்பும் சிந்தனை கைகேயி கூற்றாக வரும் இம்மூன்று பாடல்களையும் மறுபடி சிந்தித்துப்பார்த்தால், ஓர் உண்மை தெற்றெனப் புலப்படும். அந்த உண்மை யாதெனில், இராமனைக் கண்ட மாத்திரத்தில் கைகேயி மனம் குழம்பிவிட்டாள் என்பதே ஆகும். அறத்தின் வடிவாக, அழகின் சிலையாக, நேர்மையின் ஆணியாக, கை, வாய், முகம் என்பவை கமலமாக எதிரே நிற்கும் அந்த வள்ளலைக் கண்டவுடன் அவள் மனம் குழம்பியதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதன் பயனாக