பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும் ே 123 அழகு கண்ணில் தோன்றியதா என்றால் இல்லை என்கிறான் கவிஞன். இக்கண்களுக்கு வடிவு, தொழில் பற்றி உவமை செய்யப்புகும் பொழுது இவை இரண்டிற்கும் மூலகாரணமாக உள்ள இராமன் பண்புகளை நினைவுகூர்கிறான் கம்பன். திருமுகச் செவ்வி அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை ஒத்தது என்று கூறியிருந்தாலே போதுமானதுதான். முன்பு என்ற சொல்லைச் சேர்த்ததால் எப்பொழுதோ சில நேரங்களில் தோன்றிமறையும் அழகு அல்ல இது; எப்பொதுமே நிறைந்திருத்தலின் முன்பு என்ற சொல்லால் அதைப் பெறவைக்கிறான். இராமன் திருமுகச் செவ்வி என்று கூறவந்த கவிஞன், இந்த செவ்விக்கு மூலகாரணம் யாது என்பதை ஆய்ந்து அதை இரண்டு சொற்களில் வெளிப்படுத்துகிறான். "செப்ப அருங் குணத்து இராமன்" என்ற அடைமொழியால் இராமனுக்குரிய நற்பண்புகள் அனைத்தையும் சொல்லி எல்லை கண்டு விடமுடியாது என்று கூறுவதால், அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை எப்பொழுதும் நினைவூட்டிக்கொண்டு நிற்கும் அவன் திருமுகச் செவ்விக்குக் காரணம் அவன் பண்புநலன்களேயாம் என்ற கருத்தையும் பெறவைத்து விட்டான். செப்ப அருங்குணமும் அதனால் தோன்றும் திருமுகச் செவ்வியும் இராகவனை விட்டு ஒரு கணமும் பிரிந்ததில்லை. ஆதலால், திருமுகச் செவ்வி நோக்கின் அலர்ந்த செந்தாமரையினை ஒப்பதே முன்பு என்று கூறி முடித்துவிடுகிறான். அப்படியானால், அடுத்த அடியில் வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது. என்று கூறுவதன் நோக்கம் யாது எஞ்ஞான்றும் தாமரையினை ஒப்பதாக இருந்த முகம் அதனை வென்றது என்றால், வெல்வதற்குரிய காரணம் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். அது யாது என்று சிந்திப்பது நலம் பயக்கும். ஒரு தாமரை மலரின் அழகை ரசிப்பதற்கு ஒருவன் கண்கள்மட்டும் பெற்றிருந்தால் போதாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது முழு