தாயரும் இராமனும் ேே 127 ஒருவன் அந்த எருதுகளை அவிழ்த்துவிட்டான் என்று சொல்லும்பொழுது அரசை ஏற்கச் சொன்னவன் தசரதன் என்றும், அதனை இறக்கி வைத்தவள் கைகேயி என்றும் குறிப்பாகக் கவிஞன் பெறவைத்து விட்டான். இதனை அடுத்து வரும் பாடல், தேவையான இடங்களில் இரு பொருள்படப் பாடும் கம்பனின் கவி வண்ணத்துக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். "மன்னவன் பணி அன்றாகின், நும்பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்றசெல்வம் அடியனேன் பெற்றது.அன்றோ? என்இனிஉறுதி அப்பால்? இப்பணி தலைமேல் கொண்டேன்; மின்ஒளிர்கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்". - கம்ப. 1604 மனிதப் பண்பின் சிகரத்தில் நிற்கும் இராமன் கருத்துப்படி பொருள் கொள்வதானால், தாயே! இது அரசனுடைய பணி. இல்லை என்றால்கூட நீ இட்ட கட்டளையை மறுக்கும் எண்ணம் எந்நாளும் என்னிடத்தில் இல்லை. மேலும், என் பின்னவனாகிய பரதன் பெற்ற செல்வம், நான் பெற்றதாகவே கருதுகின்றேன். இதைவிட என் கடமை என்று சொல்லத் தக்கது வேறு எது? தங்கள் ஆணையைச் சிரமேல் தாங்கி இப்பொழுதே காடு செல்கிறேன். தங்களை வணங்கி இப்பொழுதே விடை கொள்கின்றேன் என்று விளக்கம் கொள்ளப்படும். இனி, இப்பாடலுக்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல், "தாயே! என் தந்தையை நன்கறிவேன். ஆதலால் இவ்வாறு கட்டளை இடத் துணியமாட்டார். ஆதலால் தாங்கள் இடும் கட்டளை மன்னவன் பணிஅன்று. ஆனாலும் (ஆயின்) தாங்கள் இட்ட கட்டளையை என்றாவது நான் மறுத்ததுண்டோ? என் பின்னவனாகிய பரதன் பெற்ற இக்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/145
Appearance