பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடி தானே தேடிவந்து ஒரு தொண்டனுடைய இதயத்துக்குள் புக விரும்புகின்றது" என்று நயம்பட உரைப்பது பரம்பொருள் இராமனின் எளிமைத் தன்மையையும் தொண்டன் அனுமனின் உள்ளத் தூய்மையினையும் ஒரு சேரச் சித்திரிப்பதாக அமைகிறது. "மூல நூல் உள்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத முறையில் தமிழ் இலக்கியங்களில் கூடக் கம்பனுக்கு முன்னும் பின்னும் இப்படி ஒரு பாத்திரம் படைக்கப்படவில்லை என்பது அறிந்து மகிழ்வதற்குரியதாகும்" என்னும் கூற்று பேராசிரியர் அனுமன் என்னும் அடியவனுக்கு அடியராக இருக்கும் பெற்றியினைப் புலப்படுத்துகிறது. 'முனிவர்களும் இராமனும் என்னும் பகுதியில் விசுவாமித்திரன் வசிட்டன், அகத்தியன், பரத்துவாசன் ஆகியோர் பண்புகளும் காப்பியத்தில் அவர்கள் பங்கும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. திருமணமாகாத இராமனைத் 'திருவின் கேள்வன்' என்று குறிப்பிடுகிறான் தயரதன். விசுவாமித்திரனோடு அனுப்ப இராமனை அழைத்துவருமாறு பணிக்குமிடத்தில் இத்தொடர் வருகிறது. இதற்கு அரசத் திருவை ஏற்றுக் கொள்ளப் போகிறவன்' என்று சூழலை யொட்டிப் பொருள் காணப்பட்டுள்ளது. இராமனுக்குத் தாடகையைக் கொன்ற செயல் நெருடலாக இருந்தது என்பதனை அயோமுகிப் படலத்தில் இராமன் இலக்குவனிடம் பேசும் சொற்களைக் கொண்டு புலப்படுத்தும் பேராசிரியரின்நுண்மான்துழைபுலம் வியப்பில் ஆழ்த்துகிறது. விசுவாமித்திரன் அகலிகையின் பழைய வரலாற்றை அறிந்தவனாதலின் அவள் சாப விமோசனம் பெற வேண்டும் என்னும் நோக்கத்திலேயே அவ்வழியாக இராமனை அழைத்து வந்தான் என்பதும், வசிட்டன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நன்மை பயக்கும் நாளாகப் பார்த்து முடிசூட நாள் குறித்தான் என்பதும், இறுதியில் முடிசூட்டு விழா அவதார நோக்கம் நிறைவேறிய நிலையில் தசரதராமனும் மூல இராமனும் ஒன்றாகிவிட அவ்வொன்று பட்ட உருவத்திற்கே நிகழ்கிறது என்பதும் புதுமையான