பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் 38 137 குரலில் ஒர் ஒலம் கேட்கிறது. (3313, 3315 கணவனுக்குத்தான் ஏதோ ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று அஞ்சிய பிராட்டி இலக்குவனை உடனே துணைக்குச் செல்லுமாறு ஏவுகிறாள். இராமன் பெருமையைக் கூறி, தான் செல்லத் தேவை இல்லை என்று கூறினான் இளைய பெருமாள். அப்பொழுது பிராட்டி கூறிய சொற்கள் யாருக்கும் பெருந்துயரை விளைக்கும் சொற்களாகும். ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ வெருவலை நின்றனை. sessmao-o------nors as a sa----------one eastews - கம்ப. 3331 இப்பாடலில் இராமனின் பண்புநலன்களில் தன்னையே மறந்து வாழும் பிராட்டி அவனைப் பெருமகன்' என்று அழைப்பதைக் காண்கிறோம். அதேபோலப் பரதனின் பண்பு நலன்களில் தன்னை இழந்த இராகவன், பரதனைப் 'பெரும்கன் என்று அழைப்பதைக் காண்கிறோம். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், இலக்குவன் எதிரே இராமனைப் பெருமகன் என்று சீதை சொல்கிறாள். அதே இலக்குவன் எதிரே பரதனைப் பெருமகன் என்று இராமன் சொல்கிறான். பெருமகன் என்ற சொல்லிற்கு இராமன் பொருளாக இருப்பது சரி. அந்தப் பட்டத்தை இராமனே பரதனுக்குச் சூட்டுகிறானே, இது பொருந்துமா, என்றோ அன்பு காரணமாக இராமன் இப்பட்டத்தைச் சூட்டினானா என்றோ ஐயப்படுபவர்கள் முற்றும் துறந்த முனிவனாகிய விசுவாமித்திரன் பரதனைப்பற்றிச் சனகனிடம் கூறுவதைக் கவனிக்க வேண்டும். "தள்ள அரியபெரு நீதித் தனிஆறு புகமண்டும் பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும்பெயரானை, எள்ள அரிய குணத்தாலும், எழிலாலும் இவ் இருந்த வள்ளலையே அனையானை, கேகயர் கோன் மகள் பயந்தாள்." - கம்ப. 657