பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 38 இராமன் - பன்முக நோக்கில் நீதி என்ற ஆறு வந்து பாயும் பள்ளம் போன்றவன் பரதன் என்றும், இங்கு கண்ணெதிரே நிற்கும் வள்ளலாகிய இராமனையே போன்றவன் பரதன் என்றும் அம்முனிவன் கூறுகிறான். பரதனைப்பற்றி முனிவன் கூறிய இலக்கணமும், இராமனை ஒத்தவன் அவன் என்ற ஒப்புமையும், பெருமகன் என்ற சொல்லுக்குப் பரதன் உரியவன் ஆகிறான் என்பதை அறிவுறுத்தும். வான்மீகத்திலும் பரதனை இராமன் 'புருஷோத்தம’ என விளிப்பதாக வந்துள்ளமை (அயோ, சர்க். 107 - சுலோ. 5) ஒப்பிடத்தக்கது. பரதன் மாட்டுக் கொண்ட அன்பினால்மட்டும் அவனைப் பெருமகன் என்று கூறவில்லை. அவன் தகுதி அறிந்தே கூறுகிறான் என்பது தெளிவாகும். இதனை மனத்தில் கொண்டுதான் கவிஞன் இவர்கள் இருவரும் தழுவிக் கொள்வதைக் கூறவந்தபொழுது இரண்டு பெரிய பண்புகள், அதாவது, தருமமும் அறமும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டன என்று உவமிக்கிறான். அயா உயிர்த்து, அழு கனிர் அருவி மார்பிடை, உயாவுற, திரு உளம் உருக, புல்லினான் - நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் தயாமுதல் அறத்தினைத் தழிஇயது என்னவே . - கம்ப 2429 இராமன்-பரதன் உரையாடல்: உரிமை யாருக்கு? ஏன்? பரதனது தவக் கோலத்தைக் கண்ணிருடன் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்த இராகவன் பின்வருமாறு பேசுகிறான்: "வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால், சரதம் நின்னதே, மகுடம் தாங்கலாய், விரத வேடம், நீ என்கொல் வேண்டுவான்? பரத கூறு எனாப் பரிந்து கூறினான்." \, - கம்ப 2470