பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் 38 139 ‘ஐயனே! அரசனோ இறந்தான். அவன் ஆணையால் இந்த உலகம் உன்னுடையதாயிற்று. மகுடம் சூடி ஆட்சி செய்வதற்குப் பதிலாக விரதவேடம் தாங்கியது ஏன்?” என்று வினவுகிறான் தமையன். எவ்வித உட்கருத்தும் இல்லாமல் அன்பு மீதுர, "ஆள வேண்டிய நீ துறவு பூண்டது ஏன்” என்றுதான் இராமன் கேட்கிறான். இந்த வினாவிற்கு நேரிடையாக விடை கூறாமல், தவம் பூணுவதற்குக்கூடத் தனக்குத் தகுதியும் உரிமையும் இல்லைபோலும் என்று ஏழு பாடல்களில் பரதன் புலம்புகின்றான். இராமன் வினாவைக் கேட்டு 'அஞ்சி, நடுங்கி, பதைபதைத்துக் கையைத் தலைமேல் கூப்பி ஆட்சியை ஏற்பதற்கு உன்னைத் தவிரச் சிறந்த மன்னர் யாருளர் ” (247) “மனத்திற்குப் பொருந்தாத இரு வரங்களினால் உனக்கு ஒவ்வாத இந்த நிலையினைத் தந்து, மற்றொன்றால் சக்கரவர்த்தியைக் கொன்றவள் மகனாகிய எனக்குத் தவவேடம் பொருந்தாது போலும்". (24.72) - இவ்வாறெல்லாம் பேசிவந்த பரதன், திடீரென்று மிகப் பெரிய பிரச்சனை ஒன்றை முன் வைக்கிறான். 'பிறந்து நீயுடைப் பிரிவு இல்தொல்பதம் துறந்து, மாதவம் தொடங்குவாய் என்றால், மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ?" - கம்ப 2475 "நீ பிறந்ததனால் பரம்பரையாக உனக்கு வரவேண்டிய பழமையான அரசைத் துறந்து, மா தவத்தினை நீ தொடங்கிவிட்டாய் என்றால், அதுதான் சந்தர்ப்பம் என்று கருதி அறத்தை வாளினால் கொன்று தின்றது போல நீதியை புதைத்துவிட்டு, எனக்கு உரிமை இல்லாத அரசை நான் ஆள்வேனோ?” (2475)