பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துக்கள். முடிசூட்டு விழாவினைக் குறிக்கும் இரு பாடல்களில் மெளலி புனைந்தான்' என்னும் முதற்பாடலில் வசிட்டன் யாருக்கு முடி சூட்டினான் என்பதை வெளிப்படையாகக் கூறாத கவிஞன் அடுத்த பாடலில் அவன் யார் என்பதை விளக்கமாகக் கூறி வசிட்டன் பேரை விட்டு விடுகிறார் என்று நுட்பம் காட்டி வசிட்டன் பரம் பொருளுக்கு முடிசூட்டினான் என்பது பொருத்தமாக அமையாது என்பது கவிஞர் கருத்து என்று காட்டுவது அருமை. அகத்தியன் தந்த வில் பற்றிய ஆய்வு சிந்திக்கத் தக்கது. இராமனால் கொல்லப்பட்ட கரன், துடனர், கும்ப கருணன், இராவணன் ஆகியோரைப் பற்றியது அரக்கர்களும் இராமனும் என்னும் பகுதி. கரன் அறிவு விளக்கம் பெறாத வன்மை மிக்க அரக்கன்; கும்பகருணன் தன்னலமற்றவனும் போர்க்களத்தில் பகைவன் ஆற்றலைப் புகழும் பண்பாளனும் இராமனிடத்தில் வீடணனைக் காப்பாற்ற வரங்கேட்கும் ஞானியுமாகத் திகழ்ந்தவன்; இராவணன் இராமனை வேதமுதற்காரணன் என்று உணர்ந்தும் வாழத் தவம் செய்யாத பேதை என அடையாளம் காட்டப்படுகின்றனர். இறுதிப் பகுதியாகிய பரம் பொருளும் இராமனும்' என்பது கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடல்களையும் அங்கங்கே சிலரது கூற்றாக வரும் துதிகளையும் ஆராய்கிறது. கடவுள் வாழ்த்துப் பாடல்களைத்துதிகளின் துணைகொண்டு ஆராயும் அணுகுமுறை அழகும் செம்மையும் உடையது. விராதன், கவந்தன், வாலி மூவரும் மறையும் தருவாயில் மூல இராமனைத் தரிசித்தவர் என்னும் பேராசிரியர் கூற்று எவ்வளவு உண்மை என்பதனை அவர்கள் துதிகளே உணர்த்தும். 'வாலியைச் சுக்கிரீவனிடம் கொண்ட எல்லையற்ற பாசத்தினால் கொன்ற இராமன் சாதாரண மனிதன் தன் செயல் சரியன்று என்று கருதி வாலி மைந்தன் அங்கதனிடம் 'நீ இது பொறுத்தி என்று வேண்டும் இராமன் மாமனிதன் என்பதுபோல அவன் மனிதனாக விளங்கிய