பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - 38 இராமன் - பன்முக நோக்கில் இப்பாடலின் இறுதி அடி இலக்குவன் ஆதிசேடன் அவதாரம் என்ற கருத்தை அடியொற்றிப் பிறந்ததாகும். இலக்குவன் சினத்தை வருணிக்கப் புகுந்த கவிச்சக்கரவர்த்தி நாகராசனாகிய ஆதிசேடனை நினைப்பூட்டிச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றான். சினத்தின் எல்லையில் நின்று பெரிய தாயையும், அவள் மகன் பரதனையும் இலக்குவன் பேசும் பேச்சு இராமன் மாட்டு அவன் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்துகிறது என்பது உண்மைதான். "சிங்கக் குருளைக்கு இடுதிம் சுவை ஊனை, நாயின் வெங்கண் சிறுகுட்டனை ஊட்ட விரும்பினாளே! நங்கைக்கு அறிவின் திறம் நன்று. இது நன்று, இது r எனனா, கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான்." - கம்பு 1718 என்றாலும், என்ன நடந்தது? யார் இதில் குற்றம் செய்தவர்? என்பவற்றையெல்லாம் அறிய இலக்குவனுக்குச் சந்தர்ப்பமே இல்லை. பராபரியாகக் காதில் விழுந்த செய்தியை வைத்துக் கொண்டு, பெருநீதித் தனியாறு புக மண்டும் பள்ளம் எனத் தகைய பரதனை நாய்' என்று இலக்குவன் பேசுவது அடிப்படையான அவன் பண்பாட்டில் உள்ள ஒரு சிறு குறையை எடுத்துக்காட்டுகிறது. அவனால் நாய்க்குட்டி என்று ஏசப்படும் பரதன், அயோத்தியை விட்டுக் கேகயம் சென்று பன்னாட்களாகிவிட்டன. அப்படி இருந்தும் கைகேயியின் சூழ்ச்சிக்கு அவனும் உடந்தை என்பதுபோல் பேசுவது முன்பின் எண்ணிப்பார்க்காமல் செயலில் இறங்கும் முன்கோபி என்பதை எடுத்துக்காட்டுகிறது. பேராற்றல் மிக்கவனும் மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவனுமாகிய ஒருவனிடத்து இந்த முன்கோபம் பேராபத்தை விளைவிக்கும். இப்படிப்பட்ட ஒருவன் பரதனைப்போல் தனித்தியங்கவோ, பெரிய பொறுப்பை ஏற்று நடத்தவோ இயலாது. நல்ல வேளையாக, இராகவனின் நிழலாய் அவன் அமைந்து