பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 38 இராமன் - பன்முக நோக்கில் அடியனேன் பிழைத்தது யாது? இலக்குவன் அமைதி அடைந்த பின்னர் அவனை அருகில் இருத்திய இராமன், "யான் காடு சென்றுவிட்ட பிறகு துயரக்கடலில் மூழ்கி இருக்கும் தந்தை, தாயர் அனைவருக்கும் உதவியாக இருந்து, என் பொருட்டாக நீ பணிபுரிய வேண்டும்" என்று இராகவன் வேண்டினான். 'உன்னை நீ என். பொருட்டு உதவுவாய்' (1755) என்பதே அவன் வேண்டுகோள். இந்த வேண்டுகோளைத் தசரதராமன் வேறு எண்ணத்துடன் கூறியிருப்பினும் மூலஇராமனின் கட்டளையாக அது அமைந்து விட்டமையின் இராமன் பொருட்டு இலக்குவன் மாயமானில் தொடங்கி, நாகபாசம் வேல் ஏற்றல், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றைத் தானே ஏற்று இராமன் பொருட்டு ஒருமுறை அல்ல பன்முறை உயிரை ஈந்து உதவினான். இராமனின் இந்த வேண்டுகோளுக்கு, நொந்த மனத்துடன் இலக்குவன் விடை கூறுகிறான். ஆண்தகை அம்மொழி பகர அன்பனும், தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா, மீண்டது ஒர் உயிர் இடைவிம்ம விம்முவான், "ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?" என்றான். - கம்ப. 1756 இந்தச் சொற்களைக் கேட்ட இராகவன் அதிர்ச்சி அடைந்து விட்டான். இதற்கு மேலாக ஒருபடி சென்ற இலக்குவன், "நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளம் ” என்று அடுத்த வினாவினைத் தொடுத்தான். இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஐயனே! கொடுமைகள் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தும் என்னைச் சினம் தணிக என்று கட்டளை இட்டாய். உன் ஏவலுக்கு அஞ்சி என் சினத்தை விட்டு விட்டேன். நீ பிறப்பித்த அந்த ஆணையைவிடக் கொடியது இப்பொழுது நான் போகிறேன், நீ இங்கே இரு" என்று கூறும் சொற்கள்" (1759).