பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ேே . . 169 "உடம்பு முழுவதும் பொன்னாகவும், காது, கால்கள் ஆகியவை மாணிக்கங்களாகவும் இருக்கின்ற இந்த மான் இயற்கையின் படைப்போடு ஒத்திருக்கவில்லை. ஆகவே, இது மாயம் என்பதில் ஐயமில்லை. வேறுவிதமாக இதைக் கருதுதல் அறிவுக்குப் பொருத்தமன்று" என்றான் இளையவன் (3288). அதுகேட்ட இராகவன், "நிலைபேறில்லாத இந்த உலகின் இயற்கையை மாபெரும் அறிஞர்களும் முழுதும் உணர்ந் தார்கள் இல்லை. நிலைபெற்ற உயிர்கள் கோடிக்கணக்கான மாறுபட்ட உடல்களுடன் உலகம் முழுதும் வியாபித்து இருப்பதால் இவ்வுலகில் இல்லாதன எதுவுமே இல்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். இளமையோடு கூடிய குமரனே" என்று பதிலிறுத்தான் இராகவன். (3289) "இயற்கைக்குப் பொருந்தாத ஒன்று இம் மண்ணுலகில் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மாயமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறும் அறிவு வாதத்திற்கு விடைகூறப் புகுந்த இராகவன், இவ்வுலகில் இல்லாதன இல்லை என்று விடை கூறினான். இப்படிக் கூறுபவனாகிய தான் அறிவிலும், ஆண்டிலும், அனுபவத்திலும் மிக்கவன் என்று சொல்லிக்கொள்வது போல, இலக்குவனைப் பார்த்து 'உலக அனுபவம் நிறையாத இளமை உடையவனே! என்று ஒர் எள்ளல் குறிப்பும் தோன்றப் பேசுவது இராமனுடைய இப்பொழுதைய மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. தன்னுடைய இந்த வாதத்தை நிறுவுவதற்காக ஒரு மேற்கோளை யும் அடுத்த பாடலில் எடுத்துக் காட்டுகிறான் இராகவன். "இலக்குவ! என்ன நினைத்து நீ இந்த முடிவுக்கு வந்தாய்? (கண்ணால் காணாவிடினும்) எத்தனை புதிய செய்திகள் நம் காதுகளில் வந்து விழுகின்றன. பொன்மயமான உடலோடு கூடிய ஏழு அன்னப் பறவைகள் இருப்பது பற்றி நீ கேள்விப் படவில்லையா?” (3290) “நிறைந்துள்ள உயிர்கள் இன்ன வடிவுடன் இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற நியதி ஒன்றும் இல்லை. இதனை நீ