170 38 இராமன் - பன்முக நோக்கில் அறிந்து கொள்வாயாக’ (329) என்று இராகவன் தன் கருத்தை வலுவாகக் கூறினான். இவர்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சீதை, இவர்கள் வாதம் முடிவதற்குள் மான் எங்கேயாவது ஓடி மறைந்துவிட்டால் என்ன செய்வது என்று மிக்க வருத்தத் துடன் சாலையின் உள்ளே செல்லவும், அவள் வருத்தத்தைத் தணிக்க வேண்டி "எங்கே அந்த மானைக் காட்டு பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னே சென்றான் இராகவன். வீரக்கழலை அணிந்த தம்பி நொந்த மனத்துடன் இராகவன் பின்னே சென்றான். (3292) சீதை காட்டிய மான் தன் அழகிய விழிகளால் இராமனை உற்றுப்பார்க்கவும் நன்று இது என்று கூறினானாம். அந்தச் சொல்லின் பொருளை நம்மனோர் அறிந்து கூற முடியுமோ? அரவுப் படுக்கையில் இருந்து தேவர்கள் செய்த புண்ணியத் தால் இம் மண்ணுலகத்திற்கு வந்தது ஒரு காரியத்தைக் கருதி அல்லவா? அது பழுதுபட்டுவிடுமோ? (3293) "இளையவனே! இந்த மானின் கால்கள், உடம்பு, புல்லைக் கறிக்க நீட்டும் நா, காதுகள் என்பவற்றைப் பாராய். இந்த மான் தனக்குத்தானே உவமை ஆவது அல்லது பிறிதொன்றுக்கு உவமையாக்கப்படும் தன்மையது அன்று. (3294 "வில்வீரனே! இந்த மானைப் பார்த்தவர் ஆண், பெண் யாராயினும் சரி, ஆசை கொள்ளாமல் இருக்க (LDLq-tluf!ġil. ஒளி விளக்கில் விழுகின்ற விட்டிலைப் போலப் பார்ப்பவர் மனம் இந்த மானின் அழகில் தோய்ந்துவிடுதலில் வியப்பு ஒன்றும் இல்லை." (3295) தன் வாதங்களை முந்தைய பல பாடல்களில் தருக்க ரீதியாக எடுத்துக் கூறிய இராகவன், இப்பொழுது அவன் வாதத்தின் முடிவாக ஒரு கருத்தைப் பேசுகிறான். 'இந்த மானின் அழகில் ஈடுபட்டவர் யாராக இருப்பினும் விளக்கிடை வீழும் விட்டிலைப் போல் அதன் அழகில் மனம் பறிகொடாமல் இருக்க முடியாது, என்று கூறி முடித்தவுடன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/188
Appearance