பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் 38 177 இராமனைப் பொறுத்தமட்டில் இதனைத் தலைகீழாகக் கொள்ள வேண்டும். இறைவனே இராமன் என்ற வடிவு கொண்டு அவனுள் உறையும் உயிராகவும் இருக்கின்றான். அதனால்தான் அவனை அவதாரம் என்று சொல்கின்றோம். தான் எடுத்த மனித வடிவுக்கு ஏற்ப அவன் தொழிற்படுவதை இராமகாதை முழுதும் காட்டிச் செல்லும் கம்பன், மாரீசன் வதைபடலத்தில் அதை மிகுதிப்படுத்திக் காட்டுகின்றான். அவன் ஒன்றைக் கூறும் பொழுது சில தொடர்களைப் பயன்படுத்துகிறான். அத்தொடர்களுக்குப் பொருள் செய்யும்பொழுது, பேசுபவன் தசரதகுமாரன் என்ற மனிதனோ, அல்லது அவ்வடிவினுள் புகுந்து நிற்கும் பரம்பொருளோ என்று சிந்தித்துத் தெளியவேண்டும். ஆகவேதான், இந்த ஏழு எட்டுப் பாடல்களிலும் பேசுபவனை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவனை விளிக்கும் வகையில் சில சொற்களைக் கம்பன் விடாது சொல்லிவருகிறான். அவற்றை வரிசைப்படுத்திக் காண்பது நலம். அவை: எம்மான் (328); தே மலரோன் அம்மான் (3286) ; இறைவன் (329, சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தவன் (3293) ; ஆரியன் (329); தேவரை இடுக்கண் தீர்ப்பான் (3299); சதுமுகன்தாதை (330). ஏழு பாடல்களில் ஏழு இடங்களில் இராமன் வடிவில் நின்றவன் யார் என்பதை நினைவூட்டுகிறான். அதற்குரிய காரணம் ஒன்றுண்டு. இராமனை மனிதனாகக் கருதி இப்பகுதியைப் படிக்கும் நாம், மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காக இலக்குவனிடம் போலியான வாதங்களைப் பேசுகிறான் என்று நினைத்துவிடுவோம். மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும் தன்னை நம்பி வந்தவளை மகிழச் செய்வது கணவனின் தலையாய கடமையாதலால் இராமன் செய்ததை சரி என்றே சொல்லவேண்டும். அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக மண்ணிடைவந்த பரம்பொருள் இவன் என்பதையும் மறக்கலாகாது. அ-12