பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே 18t 'யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் (குறள் 1094) என்றும் வள்ளுவப் பேராசான் கூறுவதும், கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி', (கலித். 51:15) என்ற கலித்தொகையும், அண்ணனும் நோக்கினான் (கம்ப 514) என்ற கம்பன் பாடலும் நோக்கி என்ற சொல்லுக்கு இங்கே நாம் கொண்ட பொருள் பொருத்தமானது என்பதை விளக்கும். இந்த நுணுக்கத்தை மனத்தில் வாங்கிக் கொண்டு, நோக்கிய மானை நோக்கி என்ற அடியை மறுபடி பார்த்தால், மாரீசன் என்ற மானும், தசரதகுமாரன் என்ற மனிதனும் களத்தில் இருந்து மறைந்துவிடுகின்றனர். மூல இராமனின் ஏவலுக்கு உட்பட்டு மான் வடிவில் வந்த ஒன்று, தசரத ராமனின் உள்ளிருக்கும் மூல இராமனை ஒரு கருத்தோடு நோக்கிற்று என்கின்றான், கவிஞன். என்ன கருத்தோடு நோக்கிற்று: "ஐயா! முதற்காரணனாகிய உன் ஏவலின்படி ஒரு சூழ்நிலை உருவாக்க வந்துவிட்டேன் என்பதைத் தெரிவிக்கின்றேன்." "ஒரு மானைப் பிடிக்க நீ எதற்குப் போகவேண்டும்: நான் பிடித்துத் தருகிறேன்” என்று இளைய பெருமாள் சொன்ன பொழுது, அவனையும் ஒரு நோக்கத்தோடு நோக்கினேன். ஆனால் பாவம்! இளையவன் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. விளையாடுவதற்கு மான் வேண்டும் என்றுதான் பிராட்டி விரும்பினாளே தவிர அதை யார் பிடித்துத் தரவேண்டும் என்று அவள் சிந்திக்கவில்லை. திடீரென்று இளையவன் புறப்பட்டவுடன், "நீ என்னை அனுப்பிய நோக்கமே கெட்டுவிடும்” என்று பயந்து, ஒரு வினாடி பிராட்டியின் மனத்தில் புகுந்தேன். அதனால்தான் மான் வேண்டும் என்று முரண்டு பிடித்த அவள், நாயக! நீயே பற்றித் தருகலை போலும் என்று அவளைப் பேசவைத்தேன். அனைத்தும் உன் ஆணைப்படியே நடந்துவிட்டது ஐயா! என் பணி முடிந்து விட்டது. இனி உன் அம்பால் இந்த மாய உடலை ஒழித்து விட்டு உன் அடி சேர