பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 3 என்று இன்று அழைக்கப்படும் காசியை ஆண்டு வந்தான். அவனுக்கு இராமன், லக்ஷ்மணன், சீதை என்ற மூன்று மக்கள் இருந்தனர். அவர்களுடைய தாய் இறந்துவிட்ட காரணத்தால் தசரதன் இரண்டாம் மனைவியாக ஒருத்தியை மணந்தான். அவள் வயிற்றில் பிறந்தவன் தான் பரதன். தன் இரண்டாம் மனைவிக்கு ஒரு வரம் கொடுத்திருந்தான். வரம் கொடுத்தபொழுது அதை வேண்டாம் என்று மறுத்த அவள், பரதனுக்கு வயது வந்தவுடன் அவனுக்குப் பட்டம் வேண்டும் என்று தசரதனுக்கு வரத்தை நினைவூட்டி அதைப் பெற்று விட்டாள். அதனை ஏற்றுக்கொண்ட தசரதன் தன் முதல் மனைவியின் பிள்ளைகள் மூவருக்கும் ஏற்படும் ஆபத்தை மனத்தில் நினைத்து இராமன், தம்பி இலக்குவன் ஆகிய இருவரையும் காட்டிற்குப் போகும்படியும், சோதிடன் கூறியபடி 12 ஆண்டுகள் கழித்து தான் இறக்கும்பொழுது, திரும்பிவந்து போர் செய்து அரசை மீட்டுக் கொள்ளுமாறும் புத்திமதி கூறினான். அதனை ஏற்றுக்கொண்ட இராமன், தம்பி இல்க்குவனையும், தங்கை சீதையையும் அழைத்துக் கொண்டு இமயமலை நோக்கிப் போய் விட்டான். சோதிடன் சொன்னதற்கு மாறாகத் தசரதன் ஒன்பதாவது ஆண்டிலேயே உயிர் நீத்தான். பரதன் மணிமுடியை ஏற்றுக் கொள்ள மறுத்து, அண்ணனை அழைத்துவர இமயம் சென்றான். பரதன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இராமன் வாரணாசிக்கு வர மறுத்துவிட்டான். வேறு வழியில்லாமல் இலக்குவனையும், சீதையையும் உடன் அழைத்துக்கொண்டு இராமனுடைய பாதுகைகளைப் பெற்றுக்கொண்டு, வாரணாசி மீண்ட பரதன், அண்ணன் வரும்வரையில் பாதுகையின் பிரதிநிதியாகத் தான் இருந்து, ஆட்சி செய்து வந்தான். மூன்றாண்டுகள் கழிந்த பிறகு சாந்தா என்ற பெண்ணை மணந்துகொண்டு 1600 ஆண்டுகள் ஆட்சி செய்தான்." " The Rise of the Religious significance of Rama by Frank Whaling-Page95 (Motilala Banarsidass, Delhi - 1980).