பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே 193 அற்புதமாக உள்ளது. உயிர்களுக்கெல்லாம் தந்தையாக உள்ள திருமாலின் அவதாரமாகிய இராகவன், பெருந்துயரம் காரணமாக முன்பின் யோசியாமல் உலகத்தை அழிப்பேன் என்று கூறும்பொழுது ஒரு சிறிதும் அஞ்சாமல் இராமன் முகத்தைப் பார்த்து, மகனே! தவறு செய்தவன் நீ உன் தவற்றின் காரணமாக இக்கொடுமை. நிகழ்ந்தது. இதில் ஏனைய உயிர்களும், உலகமும் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என்ற கருத்தில் சடாயு பேசுவது இராம காதை முழுவதிலும் வெறு எங்கும் காணமுடியாத சிறப்புடைய பகுதியாகும். இதோ அப்பாடல்: "வம்புஇழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள்வைக, கொம்புஇழை மானின் பின்போய், குலப்பழிகூட்டிக் (ിങ്കT്ച്, அம்புஇழை வரிவில்செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை, உம்பிழை என்பத அல்லால், உலகம் செய்பிழையும் உண்டோ?" - கம்ப. 3526. கழுகின் வேந்தனின் இந்த அறவுரை கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் குளிர்ந்த நீரைத் தெளித்ததுபோல் ஆயிற்று. ஆம்! இராகவன் சினம் தணிந்தான். துரதிர்ஷ்டவசமாக இந்த அறவுரை கூறிய பின்னர்ச் சடாயு உயிர் நீத்து விடுகிறான். இராம - இலக்குவர்கள் அவனுக்கு ஈமக்கடன் செய்கின்றனர். வியப்பினும் வியப்பு! தவம் இருந்து, வேள்வி செய்து இப் பிள்ளையைப் பெற்ற தசரதனுக்கு இப்பிள்ளை கையால் நீர்க்கடன் செய்யக் கொடுத்து வைக்கவில்லை. அவனுக்குக் கிடைக்காத அப்பெருஞ்சிறப்பு 'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயுவுக்குக் கிடைத்தது. (3535 - 40) இலக்குவன் தேற்றுதல், மற்றும் நெறிப்படுத்தல் இராமனுடைய சினம் தணிந்தது உண்மைதான். ஆனால், மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க அ-13