பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 38 இராமன் - பன்முக நோக்கில் சுக்கிரீவனைப் பொறுத்தவரை இராமனுடைய எண்ணமும், இலக்குவன் எண்ணமும் மாறுபட்ட திசைகளில் சென்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சுக்கிரீவனைப் பற்றி ஏற்பட்ட ஐயம் இலக்குவன் மனத்தில் வளர்ந்து கொண்டே யிருந்திருக்க வேண்டும். காட்சிகள் மாறுகின்றன. இராமனைக் கொண்டு வாலியைக் கொல்ல எல்லா ஏற்பாடு களும் நடைபெற்றுவிட்டன. இந்த ஏற்பாட்டில் இராகவன் தான் முழுமனத்துடன் ஈடுபட்டான். இலக்குவன் ஈடுபடாதது மட்டு மல்ல, அதை வெறுத்தான் என்பதையும் அறிய முடிகிறது. . இலக்குவன் அடிமனத்து உணர்வுக்கு விழுந்த அடி வாலி, சுக்கிரீவன் போர் தொடங்குவதற்கு முன் தன் அண்ணனாகிய இராமனிடம் இலக்குவன் பேசும் பேச்சைக் கவனித்தால், அவனுடைய எண்ண ஓட்டங்களை ஒருவாறு அறியமுடியும். சுக்கிரீவன் சரணாகதி என்று சொன்னதும், இராமன் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டதும் இலக்குவன் மனத்தை நெருடிக்கொண்டே இருந்தன. எனவே, தன் அண்ணனைக் கொல்வதற்கு யமனைக் கூட்டி வந்திருக்கும் இந்தச் சுக்கிரீவன், முன்பின் தெரியாத தங்களுக்கு என்ன உதவியைச் செய்யப் போகிறான்! இவனை நம்புவது பொருத்தமற்றது என்ற கருத்தில் இதோ பேசுகிறான்: "ஆற்றாது பின்னும் பகர்வான், "அறத்தாறு அழுங்கத் தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விது அன்றால், மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான், வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்? விர!” என்றான். . கம்ப. 3976 இந்த வினாவிற்கு இராகவன் கூறும் விடை வியப்பை அளிக்கிறது.