பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் 38 5 ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறையில் இராமாயணம் எழுதி யுள்ளனர். இதில் உள்ள வியப்பு என்னவென்றால், இராவணனே இரண்டு இராமாயணங்களிலும் தலைமை இடம் பெறுகிறான். இராமன், இலக்குவன், இராவணன் என்ற மூவரும் சமணர் போற்றும் அறுபத்து மூன்று மகா புருஷர்களில் இடம் பெற்றுள்ளனர். விமலசூரியின் இராமாயணப்படி இராவணன் நல்லொழுக்கம் நிறைந்த சிறந்த அரசனாகக் காட்டப்பட்டுள்ளான். குணபத்திர இராமாயணப்படி சாதாரண மனிதனாக இருந்த இராமன் இறுதியில் சமணத்துறவியாக மாறிவிடுகிறான். இந்த இரண்டு இராமாயணங்களும் சமண சமய அடிப்படையில் தோன்றிய காரணத்தால் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாளா வட்டத்தில் விமலசூரியின் மரபில் சுவேதாம்பர சமணம் பரவி, ஹேமசந்திரர் ஜைன ராமாயணம் ஒன்றை வடமொழியில் எழுதினார். நாகசந்திரர், பம்பராமாயணத் தைக் கன்னட மொழியில் எழுதினார். இவை இரண்டும் சுவேதாம்பரரிடையே பெரிதும் பரவி இருந்தன. குணபத்திர ருடைய திகம்பரக் கொள்கையின் அடிப்படையில் தோன்றிய இராமாயணம் வான்மீகத்தின் அடிப்படையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தாலும் திகம்பரரிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. பெளத்த சாதகக் கதைகள் மூலம் காணப்படும் இராமன், சமண இராமாயணங்களில் காணப்படும் இராமன் என்று மற்றப் பகுதிகளை நீக்கிவிட்டு, இராமனை மட்டும் எடுத்துக் கொண்டால் சிறந்த போக்கினைக் காணலாம். பெளத்தர், சமணர் இருவரும் கடவுட் கொள்கைகளை ஏற்காதவர்கள். ஆதலின், இராமனைக் கடவுளாகவோ அவதாரமாகவோ கொள்ளாமல் நன்னடத்தை, நற்பண்பு, நல்லொழுக்கம், அறவாழ்வு என்பவற்றின் நிலைக்களனாகவே சித்தரிக்கின்ற னர். இவற்றுள் புத்த சாதகக் கதைகள் மிக மிகப் பழமையானது. வான்மீகிக்கு முன்னரோ அல்லது சற்றுப் பின்னரோ தோன்றி இருக்க வேண்டும்.