பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே 213 பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், "பழைய நின்னோடு உறவுஉள தன்மை எல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம மறவினை முடித்த பின்னர், வருவென் என்று உணர்த்தி, 'மாயப் பிறவியின் பகைளு! நல்கு, விடை எனப் பெயர்ந்து போனான்" - கம்ப 8271 இம்மாதிரி இடங்களில் தசரதராமன் மட்டுமே தொழிற்படுமாறு செய்து, தன் காப்பிய நாயகனைத் தனிப் பெருமை கொள்ளச் செய்கிறான் கம்பன். பிரமாத்திரம் விளைத்த அவலத்தில் புலப்படும் பாசம் யுத்த காண்டத்தில் நாகபாசப்படலம், பிரம்மாத்திரப் படலம் என்ற இரண்டும் இராம - இலக்குவர்க்குச் சோதனையாக அமைந்த பகுதிகளாகும். இந்த இரண்டு பாணங்களையும் தொடுத்தவன் இந்திரசித்தனே ஆவான். தொடக்கத்திலிருந்து இறுதிவரை இந்திரசித்தனுடன் போர்ப்புரிந்தவன் இலக்குவனே ஆவான். இருவருமே தெய்வப் படைகளை நிரம்பப் பெற்றிருந்தனர். ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதில் இருவருக்கும் மலைபோன்ற வேறுபாடு உண்டு. ஒருமுறை இலக்குவன் பிரம்மாத்திரத்தில் கை வைக்க இராமன் அதனைத் தடுத்துவிட்டான். இந்திரசித்தனைப் பொறுத்தமட்டில் இந்தக் கவலையே இல்லை. ஆனால், நாகபாசத்தையோ பிரம்மாத்திரத்தையோ இந்திரசித்தன் தொடுக்கிறான் என்று தெரிந்தால் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையவன் இலக்குவன் (8202). போரின் தொடக்கத்திலேயே இலக்குவன் ஆற்றலை நன்கு அறிந்துகொண்ட இந்திரசித்தன் ஆழ்ந்த சிந்தனையுடன் இந்த இரண்டு அஸ்திரங்களையும் தொடுப்பதை இலக்குவன்