பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே 217 பிள்ளைகளாகப் பிறந்தோம்” என்ற கருத்தில் இதோ பேசுகிறான்: "முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது, என்னின் தோன்றிய துயரின், ஈறுசேர் மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்; நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்!" (8812) இப்பாடலின் பொருளை மேலும் சிந்தித்தால் சில ஆழமான கருத்துகளைக் கவிஞன் இதனுள் பொதிந்து வைத்திருப்பதைக் காணமுடியும். தசரத ராமன் பேசுவதாக வைத்துக்கொண்டால் "இலக்குவன் முடிந்திருந்தால் நானும் முடிந்துவிடுவேன்; அயோத்தியில் உள்ள என் தம்பியரும் முடிவர். அந்த நிலைக்குப் பிரம்மாத்திரம் காரணமாக நாங்கள் தள்ளப்பட்டபோதே எங்கள் வாழ்வு முடிந்தது என்றே வைத்துக்கொள்ளலாம். மருத்துமலையைக் கொணர்ந்து எங்கட்கு மறுபிறவி வழங்கினாய். நன்னெறியில் நிற்பவனாகிய நீ தந்தது இப்பிறவி. ஆதலால், நின்னின் தோன்றினோம் என்கிறான் இராகவன். இனி மூல இராமன் பேசுவதாக வைத்துக்கொண்டாலும் பின்வரும் முறையில் பொருள் கொள்ளலாம்: இட்சுவாகு பரம்பரையில் வந்த தசரதன் யாகங்கள் செய்து எங்களைப் பெற்றான். மூத்தவனாகிய என்னால் விளைந்த துயரம் காரணமாக முடிவை அடைந்துவிட்டான். அவன் பிள்ளைகளாகிய நாங்கள் இன்று முடிந்துவிட்டோம். இப்பொழுது உன்னிடம் பிள்ளைகளாகப் பிறந்தோம் என்பதன் பொருள் யாது? கிரியைகளைச் செய்வதன்மூலம் பரம்பொருளையே பிள்ளையாகப் பெறும் வாய்ப்பைப் பெற்றாலும் அந்தப் பிள்ளையை வைத்து வாழக்கூடிய தகுதிக்குறைவால் தசரதன் உயிர் இழந்தான். இப்பொழுது ஒரு தொண்டன், பக்தன், அகங்கார ம்மகாரங்களைச் சுட்டெரித்தவனாகிய ஒருவன் எதிரே நிற்கின்றான். அவனுள்ளே இருக்கும் பரம்பொருள் இப்பொழுது வெளிப்பட்டு நிற்கின்றான். "இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்” என்ற ஒளவையின் பாடல்,