உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 221 தன்னலமற்ற காதலோடு கொண்டு வந்த உணவு அமிழ்தைவிட உயர்ந்ததாகும். அந்த உணவு மீன்வடிவத்தில் உள்ளதே தவிர உன்னுடைய பரிவுணர்ச்சியால் மூடப்பட்டிருத்தலின் மிக்க பவித்திரமானவையாகும். இந்த உணவு எம்மனோர்க்கு உரியனவாகும். இதை நாம் ஏற்றுக்கொண்டு உண்டதாகவே நீ வைத்துக் கொள்ளலாம்" என்ற கருத்துடன் அமைந்த, "அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்தகாதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே? பரிவினின் தழிஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் உரியன, இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?" எனறான. - கம்ப 1967 என்ற பாடல் நம் சிந்தனைக்குரியது. மூல இராமன் பார்வையில் முனிவர்கள் பார்வையில், வந்தவன் கல்வியறிவில்லாத ஒருவன். அந்த அறிவில்லாதபொழுது ஞானத்தை அடைய முடியாது. அவன் கையில் இருப்பதோ முனிவர்களும், இராமனும் இருக்கும் இடத்தில் நினைக்கத்தகாததும், அனுசிதம் என்று கருதப்படுவதம் ஆன மீன். எனவே, அவன் முனிவர்களின் கேலிச் சிரிப்புக்கு இடமாகிவிடுகிறான். தசரத ராமனின் பார்வையில் இந்தக் குகனும், அவன் கையில் உள்ள மீன் கலயமும் ஒரு வினாடி பட்டு, மறு வினாடி இரண்டு பெரிய மாற்றங்கள் அங்கே நிகழ்கின்றன. தசரத ராமனிடத்தில் அங்குள்ளவர் யாருக்கும் தெரியாமல் மூல இராமன் தோன்றுகிறான். அந்த மூல இராமன் கண்ணில் ஆஜானுபாகுவான குகன் வடிவம் மறைந்து, தலைமுதல் கால்வரை அன்பே வடிவான ஒர் உருவம் தோன்றுகிறது. அவன் கையில் உள்ள கலயமும், அதில் உள்ள மீனும் மறைகின்றன. பரம்பொருளுக்குச் செய்யப்படும் அவிர்ப்பாகம்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/241
Appearance