பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 38 இராமன் - பன்முக நோக்கில் போன்ற துய்மை உடைய பொருளாக மாறிவிடுகிறது. அன்பினால் செய்யப்பட்ட கலயத்தில் மீன்வடிவில் உள்ள அந்த அன்பு, மூல இராமனுக்குச் சிறப்புடையதாகக் காட்சி அளிக்கிறது. அவன் தேவர்களுக்கு வழங்கிய அமிழ்தின் ஒருபாகம் இந்தக் கலயத்தில் இருப்பதாக நினைக்கின்றான். அவன் வழங்கிய அமிழ்தில் தேவரைக் காக்கும் கருணை இருந்தாலும் பாசத்தோடு பிணைந்த அன்பு கலந்திருக்க வில்லை. காத்தற் கடவுள் என்ற முறையில் கடமை வழிப்பட்ட கருணையே அமுதம் வழங்கிய திருமாலுக்கு இருந்தது. தேவர்க்குக் குகன் கொண்டுவந்த அமிழ்தில் பரிவும் அன்பும் கலந்திருந்தமையின் அது பவித்திரப் பொருளாக மாறிவிடுகிறது. பாற்கடலில் கிடைத்த அமிழ்தம் அன்பு கலவாமையின் அதனைப் பெருமான் தான் உண்ணவில்லை. இங்கே குகன் கொண்டு வந்த அமிழ்தம் பரிவும் அன்பும் கலந்ததாதலின் அந்த வெறும் அமிழ்தத்தை விடச் சீர்த்ததாகவும் பவித்திரமானதாகவும் ஆகிவிட்டது. எனவே, 'ஏற்றுக்கொள்ளுதற்குரிய தகுதி இதற்கு ஏற்பட்டுவிட்டதாதலின் மிக்க மகிழ்ச்சியுடன் நான் இதை உண்டேன் என்றே வைத்துக் கொள்ளலாம்” என்ற மிகஆழமான பல பொருளும் கிடைக்குமாறு இக்கவிதை அமைக்கப் பெற்றுள்ளது. அன்பு வலையில் மறுநாள் பெருமான் முதலிய மூவரையும் ஒடத்தில் ஏற்றிக்கொண்டு குகனே செலுத்துகிறான். ஒடத்தில் செல்லும் பொழுது இராகவன் குகனை நோக்கிச் "சித்திரகூடத்திற்கு வழி யாது" என்று கேட்டுவிட்டான். "சித்திரகூடத்திற்குக்கூட வழி தெரியாத இவர்கள் ஒரு பெண்ணையும் உடன் வைத்துக் கொண்டு எப்படி வனத்தில் வாழப்போகிறார்கள்” என்று நினைத்தவுடன் குகன் மனம் உருகிவிட்டது. குகன் இராமனை நோக்கி "ஐயனே! காட்டு வழிகள் அத்தனையும் அறிவேன் நான். காய், கிழங்கு முதலியவற்றை எளிதாகத் தேடிக் கொண்டுவருவேன். எனவே,