பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 38 இராமன் - பன்முக நோக்கில் கொண்டது போல, குகன் கொடுத்த மீனை இராமன் ஏற்றுக் கொள்கிறான் என்பதையும் நினைய வேண்டும். கண்ணப்பன் திறத்தை அளந்தறிய இயலாது; அன்புப் பிழம்பாய்த் திரிவார். அவர் கருத்தின் அளவினரோ என்பது சேக்கிழார் வாக்கு. காளத்தி வேடனை அறிவுகொண்டு கணிக்க முடியாது; கங்கை வேடனாகிய குகப் பெருமான் நிலையும் அதுவே. இராமன் இரக்கம் வெளிவந்த தன்மை சுக்கிரீவனும் இராமனும் கவந்தனும் சவரியும் சுக்கிரீவனிடம் போகுமாறும், அவன் துணையை நாடுமாறும் அறிவுரை கூறி, அவன் இருக்குமிடம் செல்லும் வழியையும் கூறி அனுப்பினர். அவர்கள் சொன்ன வழியில் இராகவன் சுக்கிரீவனிடம் வந்தான். சுக்கிரீவன் யார் என்றோ அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் உள்ள உறவு எத்தகையது என்றோ எதுவும் தெரியாத நிலையில் இராகவன் வருகிறான். முதலில் அனுமனைச் சந்திக்கின்றான். மாபெரும் அறிவாளியாகிய அனுமன் இவர்கள் ஆற்றலைத் தன் துண்ணறிவால் அறிந்து கொண்டமையின், சுக்கிரீவனை இவர்களுடைய நண்பனாகச் செய்யப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டான். இராமனைப் பொறுத்தவரை சுக்கிரீவனுடைய முதல் சந்திப்பு அவனிடம் மிகப்பெரிய இரக்கத்தை உண்டாக்கிவிட்டது. விருந்தினனாக வந்த இராகவனின் துயரம் என்ன என்றுகூடக் கேட்காமல், அண்ணனிடம் தான் பட்ட கொடுமைகளை விவரிக்கத் தொடங்கிவிட்டான். அது கேட்ட இராகவன் அவனுடைய பரிதாபமான நிலையைச் சிந்தித்தவுடன், "உன்தனக்கு உரிய இன்பதுன்பங்கள் உள்ள, முன்நாள் சென்றன போக, மேல்வந்து உறுவன தீர்ப்பல்; அன்ன நின்றன, எனக்கும் நிற்கும் நேர்" என மொழியும் நேரா. - கம்ப 381