பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 .ே இராமன் - பன்முக நோக்கில் ஒருவன் நல்லோர்க்கு நனி வழங்க வேண்டும். அல்லோரைத் தண்டித்தே ஆக வேண்டும்” என்றும் கூறினான். (4128) குறிக்கோள் வேண்டும் இவ்வாறு பல நீதிகளையும் எடுத்துக்கூறிய இராகவன் புதிதாக அரசு ஏற்கப் போகும் சுக்ரீவனுக்கு வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என அறிவுறுத்துகிறான். அக் குறிக்கோள் எதுவாக இருத்தல் வேண்டும் என்ற வினாவிற்கு விடை அளிப்பவன் போல அறவுரையின் இறுதிக்கண் ஒர் ஈடு இணையற்ற கருத்தைப் பேசுகிறான்: "இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும், யாண்டும், திறத்துளி நோக்கின், செய்தவினை தரத் தெரிந்த அன்றே? புறத்து இனி உரைப்பது என்னே? பூவின்மேல் புனிதற்கேனும், அறத்தினது இறுதி, வாழ்நாட்டு இறுதி, அஃது உறுதி அன்ப" - கம்ப 4129 இறுதியில் சொன்னது ஏன்? ஒருவன் வாழ்க்கையில் அறம்தான் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற இக் கருத்தை இறுதியாகச் சொல்வதன் நோக்கம் ஒன்றுண்டு. எல்லாச் செல்வத்தையும் இழந்து, அதிகாரத்தையும் இழந்து, மனைவியையும் இழந்து இரலைக்குன்றில் ஒளிந்து வாய்ந்த சுக்கிரீவனுக்குத் திடீர் என்று இழந்த அனைத்தும் ஒரே வினாடியில் கிடைத்து விட்டன. இத்தகைய பெறலரும் திருவை ஒரே வினாடியில் பெற்றவர்கள், அறம் நிரம்பிய, அருளுடைய அருந்தவர்களாக இருப்பினும், சிந்தனை பிறிதாகிவிடும். ஆதலால், பெருஞ்செல்வத்தைப் பெற்ற சுக்கிரீவன் என்ன ஆவான் என்பதைத் தன்னுடைய நுண்ணறிவின் மூலம் கண்டுணர்ந்த அருளின் ஆழியானாகிய இராகவன், இந்த உபதேசத்தை இறுதியில் பேசுகிறான். -