பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 36. இராமன் - பன்முக நோக்கில் "குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய் (8 - 33 - 3) என்ற மணிவாசகரின் திருவாசகப் பாடலை நினையாமல் இருக்க முடியவில்லை. இந்த நான்கு, ஐந்து பாடல்களில் தசரத ராமனாகிய மனிதனின் சினத்தின் ஏற்றமும் அடுத்த வினாடியே எல்லாக் குற்றங்களையும் மறந்து மன்னிக்கவும் மூலஇராமனின் இயல்பையும் ஒருசேர வைத்துக் காட்டுகின்றான் கவிஞன். எப்போதும் உடனிருந்த இணைபிரியாத இலக்குவன் உள்ளத்துக்கும் எட்டாத சில இயல்புகள் இராமன்பால் உண்டு என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகிறது. எவர்க்கும் எட்டாத - எவராலும் அளவிட்டு அறியமுடியாத பரம்பொருளே இராமன் என்பதைத் தம்பி இலக்குவன் அனுபவமூலமாக நமக்குக் கவிச்சக்கரவர்த்தி உணர்த்தும் இடம் இது. வீடணன் அடைக்கலப் படலத்தில் இராமனுடைய புதிய பரிமாணத்தைக் காணமுடிகிறது. சுக்கிரீவன், நீலன், சாம்பன் முதலிய ஆதரவாளர்கள் சுற்றி இருக்கையில், 'இராகவா சரணம்' என்று வந்த வீடணனைச் சேர்த்துக் கொள்ளலாமா, வேண்டாவா என்ற பிரச்சனை எழுகிறது. இக்கூட்டத்தில் இராகவனை ஒத்தவர்களோ, ஏற்கத் தக்க அளவில் குறைந்த தலைவர்கள் யாருமில்லை. இராகவனை நோக்கப் பிறர் யாவரும் மிகத் தாழ்ந்தவர்களே. உடனிருந்தவர்கள் அனைவரும் மாபெரும் காரியங்களைச் சாதிக்கப் போகிறவர்களும் அல்லர். அப்படி இருக்க, இராகவன், வீடணனை உள்ளே அழைத்து வருக என்று உத்தரவிட்டிருந்தால் அதனை மறுத்துப் பேசுவார் யாருமில்லை. என்றாலும், மாபெரும் அருளாளன் ஆகிய இராமன் உடன் இருக்கின்றவர்களையும் சமமாகப் பாவித்து, இதில் அவர்கள் கருத்து என்ன என்று ஒவ்வொருவரையும் கேட்பது ஈடு இணையற்ற அவன் மனிதாபிமானத்திற்கு ஒரு