பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 255 "இவன் வெளிப்பட்டதால் கதிரவன் ஒளியே மங்கி விட்டது. நம் குரங்குப் படை தலைகால் தெரியாமல் தப்பி ஒடுகின்றது." (7383) "நம்முடைய சேனையை அழிப்பதற்காகவே இராவணன் இவ் வேடத்தில் வந்திருக்கிறானா, வீடணனே! இவன் யார் என்று விரைவில் கூறுவாயாக" (7384 என்று மூன்று பாடல் களில் இவ்வளவு விரிவாக இத்தனை கேள்விகளை இராமனே கேட்குமாறு செய்த பெருமை கும்பனுக்குரியதாகும். கும்பனுடைய ஆற்றலிலும் உடல் அமைப்பிலும் மாவீரனாகிய இராமனுக்கு எப்படி இவ்வளவு மதிப்புத் தோன்றியது? இராவணனைப் பற்றி இவ்வாறு வருணிக்காத இராகவன், கும்பனைப்பற்றி மட்டும் இவ்வாறு கூறக் காரணம் என்ன என்று ஆய்ந்தால், ஒர் உண்மை விளங்கும். கும்பனுடைய முகத்தை வைத்துக் கொண்டே இந்த மாவீரன் அறுவகைக் குற்றங்களினின்றும் நீங்கியவன் என்பதை இராமன் உணர்ந்து விடுகிறான். எனவேதான் எவ்வித குற்றமும் இல்லாத இந்த மாவீரனை யார் என்று அறிந்துகொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் மற்றொரு மாவீரனாகிய இராகவன். இராமன் வினாக்களுக்கு விடை கூறவந்த வீடணன், பதின்மூன்று. பாடல்களில் கும்பனைப்பற்றி அறிமுகம் செய்கிறான். கும்பனின் ஆற்றலைப் பல பாடல்களில் விரிவாக எடுத்தோதி, இறுதியில் இரண்டு பாடல்களில் இராவணனுக்குப் பல்வகையானும் அறவுரை கூறியவன் என்றும் இராமனிடம் கூறினான் வீடணன். வீடணன் இவ்வாறு சொல்லி முடிக்கையில், சுக்கிரீவன் இத்தகைய நல்லவனைக் கொன்று ஒரு பயனும் இல்லை. நம்முடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல, இராமனும் அக் கருத்தை ஏற்றுக்கொண்டான். வீடணன் முயற்சி பலிக்காமல் போகவே, போர் தொடங்கிற்று. வர மறுத்த கும்பன் கை, கால் முதலியன துணிக்கப்பட்ட நிலையிலும் மலை ஒன்றைக் கவ்வி கும்பகர்ணன் எறிய, இராமனின்