பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 38 இராமன் - பன்முக நோக்கில் (7399) என்று வீடணன் தானே முன்வந்து செல்கிறான். சேர்ப்பேன் என்று சொன்னான்; ஆனால், கும்பகருணன் இராமன் பக்கத்தில் சேர்வான் என்ற நம்பிக்கையோடு அவன் செல்லவில்லை. சேருமேல் சேர்ப்பென்' என்றுதான் சொல்லிச் செல்லுகிறான். - நம்பிக்கை இல்லாதபோது ஏன் செல்லுகிறான் என்பது ஒரு நல்ல கேள்விதான். ஆனால், அப்படிச் சென்றதில்தான் வீடணனின் சத்திய நாட்டமும் இராம பக்தியும் துலங்குகின்றன. எப்படிப்பட்டவனை இராமன் பால் சேர்க்க முனைந்தான் என்ற சிந்தனை எழவேண்டும் என்பதற்காகவே கும்பகருணன்பற்றி இங்கே சற்று விரிவாகப் பார்க்க நேர்ந்தது. இன்னொரு தம்பியைச் சேர்க்க விரும்பி முயன்றான் ஏழாவது தம்பி, நோக்கத்தில் தோற்றிருக்கலாம். ஆனால், அந்தத் தோல்வியில்கூட ஒரு தம்பியின் உள்ளப் பொலிவு தெளிவாகிறதன்றோ? அடுத்து வந்த அதிகாயன் கும்பனை அடுத்துப் போருக்கு வந்தவன் மற்றொரு தம்பியாகிய அதிகாயன். இவன் கும்பனைப் போல மேளி படைத்தவன் அல்லன். எனவே, இராமன் எங்கே அவனைக் குறைத்து மதித்துச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்வானோ என்று அஞ்சிய வீடணன், பெரிய பெருமாளுக்கு அதிகாயன் சிறப்பையும், வன்மையையும் விரிவாக எடுத்துச் சொல்கிறான். அவன் கூறியவற்றுள் முக்கியமான சில கருத்துகளைக் காணலாம். . "இவன் நான்முகனிடம் தவஞ்செய்து பெற்ற வலியால் தேவாசுர யுத்தத்தில் மடியாமல் நின்றவன்" (7782). . "தேவர்களும், அசுரர்களும் வேண்ட மந்திர மலையையும், வாசுகியையும் கொண்டு தன் காலினாலேயே பாற்கடலைக் கலக்கியவன் ஆவான் இவன்” (7784) -