பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் 38 259 "திக்கயங்களையும் தன் கையினால் தள்ளும் பேராற்றல் படைத்தவன் இவன்” (7785) "இந்திரனோடு போர்செய்யும்பொழுது அவனுடைய பிரசித்தி பெற்ற வச்ராயுதத்தைப் பொடிப்பொடியாகச் செய்தவன் இவன்" (7788) 'அறன் அல்லாதவற்றை நல்லது என்று நினையாதவன்; ஏற்ற வலிமையுடையவர்களை அல்லாது அப்பாவிகளாகிய சாதாரணமானவர்களோடு போர் தொடுக்க விரும்பாதவன்.” (7790) "உடம்பிலிருந்து உயிர் பிரியும் நிலை வந்தாலும், மாயப் போர் செய்யும் வல்லமை உடையவர்கள் பலர் எதிர்த்தாலும், வீரத்திற்கு முரணான மாயப்போர் செய்தலை எக்காலத்தும் விரும்பாதவன் இவன்" (779) என்ற அளவில் இராமனுக்கு அறிமுகஞ் செய்ததோடு, ஆதியில் திருமாலோடு நேரிடையாகப் போர் செய்த மது, கைடவர் என்ற இருவரில், கைடவனே இப்பொழுது அதிகாயனாகப் பிறந்துள்ளான் என்று அதிகாயனின் பழைய வரலாற்றையும் கூறி முடித்தான் வீடணன். கும்பனை வருணித்தது போல அதிகாயனைப் பற்றி இவ்வளவு விரிவாக அவன் வீரத்தைப் புகழ்ந்து பேசி, இறுதியாக அறத்தை மீறாதவன் அதிகாயன் என்பதையும் கூறினான். இதற்கொரு தக்க காரணமும் உண்டு. கும்பகர்ண னுடன் இராமன் தானே நேர் நின்று போர் செய்தான் என்பதால் அவனை ஒத்த அதிகாயனுடனும் அவனே போர் செய்யவேண்டும் என்பதை நேரிடையாகச் சொல்லாமல் இவ்வாறு குறிப்பாகக் கூறினான் வீடணன். மேலும் மது, கைடவர்களை பூரீமந் நாராயணனே நேர் நின்று கொன்றான் என்பதையும் நினைவூட்டியதற்குக் காரணம் எளிதில் விளங்கும். இறந்த கைடவன் அதிகாயனாக வந்திருக்கிறான் ஆதலால், இராமனாக வந்த நாராயணனே அவனைக் கொல்லவேண்டும் என்பதும், வீடணன் சொல்வதற்குக் காரணம் ஆகும்.