பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 261 இராகவன் கூறிய வார்த்தைகள் வீடணன் மனத்தில் ஒரளவு பதிந்திருந்தது. அதிகாயனுடன் இலக்குவன் செய்த போரைக் கண்டவுடன் இராகவன் கூறியது சரியே என்ற எண்ணம் வீடணன் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதனால் தான் இந்திரசித்தனுடன் இலக்குவன் போர்செய்யும்பொழுது அதனை இராமனிடம் சென்று சொல்லவேண்டிய தேவையில்லை என்ற முடிவுடன் வீடணன் இருந்துவிட்டான். அதிகாயன், மாயப்போரில் ஈடுபடாதவன் ஆதலால் இலக்குவன் அவனுடன் மோதுவதும், வெல்வதும் இயல்பாக முடிந்துவிட்டது. இதனெதிராக, இந்திரசித்தன் மாயப்போர் வல்லவன் என்பதை இலக்குவன் அறியாத காரணத்தால்தான் அவன் மறைந்து நின்று நாகபாசத்தை எய்தவுடன் இலக்குவன் கட்டுண்ணும்படி ஆயிற்று. இராமன் கூற்றுப்படி இலக்குவன் யாராலும் வெல்லப்படாதவன் என்ற நம்பிக்கையோடு இருந்த வீடணனுக்கும் நாகபாசம் எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்து விட்டது. இந்த நிலையில் அங்கு வந்த இராகவன், "எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளையகோவுக்கு அடுத்தது என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின் பாசம் தொடுத்த கைதலையினோடும் துணித்து, உயிர் குடிக்க என்னைக் கெடுத்தனை; வீடணா! நீ என்றனன் - கேடு இலாதான் என்னை வல்லை அழைத்திலை; என்னைக் கெடுத்தனை வீடணா! என்று இராகவன் பேசுவது பொருத்த மற்ற கூற்றாகும். இலக்குவன்பால் மலைபோன்ற நம்பிக்கையை வீடணனுக்கு ஏற்படுத்திவிட்டு இப்போது நீ என்னை அழைக்க வில்லை என்று கூறுவது பொருந்தாக் கூற்றே ஆகும். பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இராகவன் ஒரளவு தடுமாறும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். உடன்பிறந்த தம்பியிடம் கொண்ட பாசம் உடன்பிறவாத் தம்பியிடம் கடுமையாகப் பேசவைத்துவிட்டது. இவ்வாறு அவன் கூறியதும் வீடணன் மனநிலையைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அந்த மனநிலையை