பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 38 இராமன் - பன்முக நோக்கில் அவனுடைய முகம் பிரதிபலித்திருக்க வேண்டும். ஒரு வினாடியில் இராமன் அவசரத்தில் தான் செய்த பிழையை உணர்ந்து கொண்டான். ஆனாலும், தவறு நடந்துவிட்டது. எனவே, இதற்குக் கழுவாய் தேடுமுகமாக இந்திரசித்து வதைக்குப் பிறகு இராகவன் அவனுக்கு ஒரு புகழ்மாலை சூட்டுகிறான். இந்திரசித்தன் தலையுடன் இலக்குவன், அனுமன், வீடணன் ஆகிய மூவரும் இராமனிடம் வந்து நின்றதும், இலக்குவனைத் தழுவிக்கொண்டான் இராமன். அவன் உடம்பில் வழியும் குருதியை தன் உடம்பாலேயே துடைத்தான் என்றாலும், வாய்திறந்து இலக்குவனைப் புகழ்ந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, "ஆடவர்திலக! நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் சேடனால் அன்று வேறு ஒர் தெய்வத்தின் சிறப்பும் அன்று வீடணன் தந்த வென்றி, ஈது என விளம்பி மெய்ம்மை, ஒரு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால். - கம்ப. 9185 “வீடணன் தந்த வெற்றியே ஈது” என்று அவன் மனம் குளிர பாராட்டுரை வழங்கினான். ஆழ்ந்து சிந்தித்தால் 'நீ என்னைக் கெடுத்தனை வீடனா என்று சொல்லியபொழுது வீடணன் எந்தக் குற்றங்களும் செய்யவில்லை. இலக்குவன் போர்த்திறத்தை உடனிருந்து கண்டுகொண்டே இருந்தான் ஆதலின் இந்திரசித்தனையும் அவன் வெல்லக்கூடும் என்று நினைத்தான். ஆதலின் இராமனிடம் ஒன்றும் கூறவில்லை. எனவே, அவன் எக் குற்றமும் இழைக்காதபோது உணர்ச்சிவசப்பட்ட இராகவன் அவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தினான். நிகும்பலைக்குப் பின் நடந்த போரில் தன் ஆற்றலை மட்டும் கொண்டு அவனை வெல்ல முடியாது என்று கண்டுகொண்ட இலக்குவன் இராமன் பரம்பொருள் என்பதைக் கூறி அதனால் இந்திரசித்தன் தலையை அறுத்துவிட்டான். எனவே, இந்த வெற்றியில் வீடணனுக்கு எந்தப் பங்கும் இல்லை. குற்றம்