பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 甘 (எமக்கென வகுத்தன அல்ல - எங்கள் அளவுக்கென்று செய்யப்படாத, அருங்கலம் - ஆபரணம்; வெறுக்கை - செல்வம், இலம்பாடு - வறுமை; ஒக்கல் - சுற்றம்; கடும்தெறல் - மிகுதியான அழிக்கும் வன்மை, மதரணி - மதிப்புயர்ந்த அணிகள், செம்முகப் பெருங் கிளை - சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்) - இக்கவிஞர் அக்காலத்தில் வழங்கிய செவிவழிவந்த இராமகாதையில் ஒரு நிகழ்ச்சியைப் போகிறபோக்கில் கூறும் முறையிலிருந்து ஒன்றை அறிந்துகொள்ளமுடிகிறது. உவமையில் இந் நிகழ்ச்சியை வைத்துக் கூறுவதனால், மக்கள் மத்தியில் இக் கதை பலருக்கும் நன்கு தெரிந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. தெய்விகக் குறிப்புள்ள கதை இதேபோன்று அகநானுாற்றுப் பாடல் ஒன்றிலும் இராமகாதை நிகழ்ச்சி ஒன்று பேசப்படுகிறது. காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி துற்றிக்கொண்டிருந்தனராம். ஒருநாள் அத்தலைவி அத் தலைவனையே மணம் முடித்துக்கொண்டாள். அன்றே ஊரார் வாய் அடங்கிப்போயிற்றாம். அதுவரை ஊர்ப் பெண்கள் பழிதுற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத்தில் மரக் கூடுகளில் வந்து பறவைகள் கலகல என்று பெருஞ் சப்தம் செய்துகொண் டிருப்பதைப்போல் இருந்ததாம். அவ்வாறு பறவைகள் ஓயாது ஒலி செய்துகொண்டிருந்த ஒரு மரத்தின் அடியில், இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் வந்து தங்கித் தன்னுடன் வந்தவர்களுடன் மந்திராலோசனை தொடங்கினானாம். அவன் கூட்டம் தொடங்கியவுடன் மரத்தின்மேல் இருந்த பறவைக்கூட்டம் கப்' என்று தம் ஒலிகளை அடக்கிக் கொண்டனவாம். இந்தப் பறவைகளைப் போலவே கலகல வென்று பழிதூற்றிக்கொண்டிருந்த பெண்கள் அப் பறவைகள் ஒலி அடங்கியதைப் போலத் திருமணத்தின் பின்னர் வாயடைத்துப் போயினராம். இக் கருத்தை