272 38 இராமன் - பன்முக நோக்கில் ஞானியாகிய வீடணனுக்கும் முடிசூட்டப்பெற்றது. குகனுக்கு அவ்வாறு செய்யப்படவில்லை. இவர்கள் இருவரும் அரசைப் பெரிதெனக் கருதினமையின் முடிசூட்டப்பெற்றது. வேடர் குலத் தலைவன் குகன் தலைமைப் பதவியை என்றும் இழக்கவில்லை. எனவே, அவனுக்கு முடிசூட்டும் தேவை ஏற்படவில்லை என்று சமாதானம் கூறலாம். சிந்தனையை ஒடவிட்டால், இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சுக்கிரீவன், வீடணன் என்ற இருவரும் அறிவின் வழியே செயல்பட்டவர்கள். சராசரி அறிவுடையவன் ஆயினும், சுக்கிரீவன் இராமனைக்கொண்டு தன் பகையை முடித்துத் தன் ஆட்சியைப் பெறலாம் என்று திட்டமிட்டுச் செயல்புரிந்தவன். இந்தத் திட்டத்திற்கு மாபெரும் அறிவாளியாகிய அனு மனின் அறிவும் இணைந்து செயல்பட்டது. எனவே, அறிவின் தொழிற்பாட்டால் இராமனைக் கண்டுகொண்ட சுக்கிரீவனுக்கு அந்த அறிவு தொழிற்படும் தலைக்குக் கிரீடம் சூட்டப்பெற்றது. வீடணனைப் பொறுத்தமட்டில் அவனும் திட்டமிட்டே செயல்புரிந்தான் என்றும், அறிவின் துணைகொண்டே அவனும் செயல்பட்டான் என்றும் இராகவனே கூறுகிறான்: "கருத்துஉற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல் அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதிஇல்லை; பெருத்துஉயர் தவத்தினான்" (6468) என்ற சொற்கள் வீடணனைக் காணும் முன்பே இராமன் அவனைப்பற்றி கூறிய சொற்களாகும். வீடணனின் அணுகுமுறை அறிவுவயப்பட்டது என்பதற்கு ஒரு நிகழ்ச்சி உள்ளது. வீடணனை அழைத்து, "வீடணா! சென்று தா, நம தேவியைச் சீரொடும்". (9988) என்று கூறி நிறுத்தாமல், உன்னும் காலைக் கொணர்தி (9989) என்றும் கூறினான். சீரொடும் கொணர்தி என்ற சொற்களே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்து விட்டன. சீரொடும்’ என்றால் உரிய சிறப்போடும் என்பது பொருளாகும். இச்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/292
Appearance